india

img

மகாராஷ்டிராவில் கனமழையின் காரணமாக  136 பேர் உயிரிழப்பு 

மகாராஷ்டிராவில் கனமழை வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 136 பேர் உயிரிழந்துள்ளதாகப் பேரிடர் மீட்புப் பணித்துறை அமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார். 

தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் மகாராஷ்டிராவில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாகக் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக ரத்தினபுரி, சத்தார, புனே, நாக்பூர், சந்திபூர், பல்கர் போன்ற மாவட்டங்களில் பரவலாகக் கன மழை பெய்து வருகிறது. 

இந்நிலையில், ராய்காட் மாவட்டம், மகாத் பகுதியில் பெய்த கனமழையால், மலைப்பகுதியான தலாய் கிராமத்தில் நேற்று இரவு திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் அந்த கிராமத்தில் உள்ள ஏராளமான வீடுகள் மண்ணில் புதைந்தது. இதுகுறித்து மகாராஷ்டிர மாநில பேரிடர் மீட்புப் பணித்துறை அமைச்சர் விஜய் தெரிவித்து உள்ளதாவது. 

தலாய் கிராமத்தில் மண்ணில் புதையுண்டவர்களில் 36 பேரின் உடல்கள் முதல்கட்டமாக மீட்கப்பட்டன. கடற்படையின் இரு குழுக்கள், மாநில மீட்புப் படையின் 12 குழுக்கள், கடலோரப் படையின் 2 குழுக்கள், தேசிய பேரிடர் மீட்புப்படை சார்பில் 3 குழுக்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கிருந்து தொடர்ந்து உடல்கள் மீட்கப்பட்டு வருகின்றன.

மாநிலம் முழுவதும் மழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 136 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் மீட்கப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர் என்று தெரிவித்தார். மேலும்  வானிலை ஆய்வு மையம் ஆறு மாவட்டங்களுக்கு 'ரெட் அலர்ட்' கொடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.