india

img

முஸ்லிம்களிடம் காய்கறி வாங்கவோ; ஆட்டோவில் ஏறவோ கூடாது என உத்தரவு..? பாதிரியாரின் வெறுப்புப் பேச்சுக்கு கன்னியாஸ்திரிகள் எதிர்ப்பு....

திருவனந்தபுரம்:
முஸ்லிம் வியாபாரிகளிடம் காய்கறி வாங்காதீர்கள், அவர்கள் இயக்கும் ஆட்டோக்களிலும் ஏறாதீர்கள் என்று கேரள பாதிரியார் ஒருவர்மத வெறுப்பு பிரசங்கத்தில் ஈடுபட்டதாக கன்னியாஸ்திரிகள் 4 பேர் எதிர்ப்புதெரிவித்துள்ளனர்.

கேரள மாநிலத்தில் கிறிஸ்தவ பெண்கள், ‘காதல் மற்றும் போதைப்பொருள் ஜிகாத்’ ஆகியவற்றுக்கு இரையாகி வருவதாக பாலா பகுதியைச் சேர்ந்த பிஷப் ஜோசப் கல்லரங்காட்டு, முஸ்லிம்களுக்கு எதிராக பேசி சர்ச்சையில் சிக்கினார். இதற்கு கேரளமுதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்டபலரும் கண்டனம் தெரிவித்தனர்.“பாதிரியார் செல்வாக்குமிக்க ஒரு மத அறிஞர், ‘நார்க்கோடிக் (போதைப்பொருள்) ஜிஹாத்’ எனும் வார்த்தையையே இப்போதுதான் கேள்விப்படு கிறோம். போதைப்பொருள் சார்ந்த பிரச்சனைகள் ஒரு குறிப்பிட்ட மதத்தை மட்டும் பாதிப்பதில்லை, அது சமுதாயத்தையே பாதிக்கிறது. போதைப்பொருட்களுக்கு மதத்தின் நிறம் இல்லை, ஆனால் அதன் நிறம் சமூகத்திற்கே விரோதமானது. பாதிரியார் என்னவிதமான சூழலில் இதனைகூறினார் என புரியவில்லை. பொறுப்பான இடத்தில் இருக்கும் மனிதர்கள் மதப்பாகுபாட்டை ஏற்படுத்தாவாறு கவனத்துடன் நடந்து கொள்ள வேண்டும்” என பினராயி விஜயன் கூறினார். கேரளத்தின் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரசும் பாதிரியாரின் இந்தப் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தது.மாறாக, “பாதிரியார் சொன்னது உண்மைதான். ‘லவ் ஜிஹாத்’ மற்றும்‘போதைப்பொருள் ஜிஹாத்’ ஆகிய இரண்டும் பரவலாக உள்ளன” என கேரள மாநில பாஜக தலைவர் கே. சுரேந்திரன் ஆதரவு தெரிவித்தார். துணை ஆயா் ஜேக்கப் மூரிக்கனோ, பேராயரின் கருத்து தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதாக, விளக்கம் அளித்தார். “பேராயா் ஜோசப் கல்லரங்காட்டு யாரையும் காயப்படுத்தும் நோக்கில் பேசவில்லை” சமாதானப்படுத்தினர். எனினும், இதுதொடர்பான சர்ச்சைகள் தொடர்கின்றன.

இந்நிலையில், கோட்டயம் மாவட்டம் குருவிலங்காடு பகுதியைச் சேர்ந்த புனித பிரான்சிஸ் மிஷன் தேவாலயத்தில் பேசிய ராஜீவ் என்ற பாதிரியார் முஸ்லிம்களை சிறுமைப் படுத்தும் வகையில் பேசியதாக, கன்னியாஸ்திரிகளே நான்கு பேர் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளனர்.“பாதிரியார் ராஜீவின் பேச்சில் மதவாதம் இருந்தது. அவர் முஸ்லிம் காய்கறி வியாபாரிகளிடம் காய்கறி வாங்காதீர்கள் என்றார். அவர்கள் ஓட்டும் ஆட்டோ ரிக்‌ஷாவில் ஏற வேண்டாம் என்றார். எங்களில் இருவர் அன்றைய கூட்டத்திலிருந்து வெளியேறினோம். கர்த்தர் அனைவரிடத்திலும் அன்பு காட்டவே சொல்லியிருக்கிறார். அண்டை வீட்டாரை நேசிக்கச் சொல்லியிருக்கிறார். மதவாதத்தைப் பரப்ப வேண்டாம் என்றும்சொல்லியிருக்கிறார். கர்த்தர் கூறியதற்கு மாற்றாக பாதிரியார் பிரசங்கம் செய்ததால் நாங்கள் இப்போது எதிர்ப்பை தெரிவித்துள்ளோம்” என்றுஅனுபமா, ஆல்பி, அன்கிட்டா உரும்பில், ஜோஸ்பின் ஆகிய 4 கன்னி யாஸ்திரிகள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளனர்.இந்த 4 கன்னியாஸ்திரிகளும், ஏற்கெனவே, தங்களின் சக கன்னியாஸ்திரி ஒருவர் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டபோது, துணிச்சலாக பிஷப் பிராங்கோ முல்லக்கல்லுக்கு எதிராக குரல் கொடுத்த வர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.