திருவனந்தபுரம்:
பழங்குடியின மாணவர்களின் ஆன் லைன் கல்விக்கு இடையூறு இல்லாமல் இணைய வசதியும் ரீசார்ஜ் வசதிகளையும் உறுதி செய்ய கேரள அரசு உத்தரவு பிறப் பித்துள்ளது. பழங்குடியினர் துணைத் திட்டத்திற்கான நிதி, நடப்பு கல்வியாண்டில் முழுமையாகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உள் ளாட்சி மற்றும் கலால் துறை அமைச்சர் எம்.வி.கோவிந்தன் மாஸ்டர் இதை அறிவித்தார்.
பள்ளி குழந்தைகளுக்காக அனைத்து பொது மையங்களுக்கும் மடிக்கணினியோ, கணினியோ வழங்கப்பட வேண்டும் என்றும்,மின்சாரம் இல்லாத இடங்களில், கேஎஸ்இபி உதவியுடன் அல்லது ஏஎன்ஆர்டி மூலம் மின்சாரம் உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இதற்காக பட்டியல் பழங்குடியினரின் துணைத் திட்ட செலவினம் அல்லது சொந்தநிதியைப் பயன்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.பழங்குடியினர் துறை ஏற்கனவே இணையஇணைப்பு மற்றும் வசதிகள் இல்லாத குழந் தைகள் மற்றும் அவர்கள் தங்குமிடங்களை அடையாளம் கண்டுள்ளது. படிப்புக்கு கணினி வசதி இல்லாத பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கு மடிக்கணினிகள் மற்றும் டேப்லெட்டுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக கல்வித் துறை, பழங்குடியினர் மேம்பாட்டுத் துறைமற்றும் உள்ளாட்சி அமைப்புகள் ஒருங்கிணைப்புடன் செயல்பட வேண்டும் என்றுஅமைச்சர் கோவிந்தன் மாஸ்டர் தெளிவுபடுத்தினார். ஒவ்வொரு மாணவரும் படிப்பிற்குக் கிடைக்கும் கணினி மற்றும் இணையத்தை அணுக முடியாவிட்டால், கற்றலை உறுதி செய்ய பொது மையங்கள் அமைக்கப்பட வேண்டும்.மாணவர்களுக்குத் தேவையான உபகரணங்கள் பழங்குடியினரின் துணைத் திட்டஒதுக்கீடு அல்லது சொந்த நிதியில் இருந்துவாங்கப்பட்டு வழங்கப்பட வேண்டும். தேவையான விவரக்குறிப்பை கல்வித் துறை வழங்கவேண்டும். ஆய்வு நோக்கங்களுக்காக தொலைக்காட்சி, மின்சாரம் மற்றும் கேபிள் இணைப்புகளில் ஏற்படும் குறைபாடுகளைச் சமாளிக்க தன்னார்வலர்கள் தயாராக இருக்கவேண்டும் என்றும் அந்த உத்தரவில் கூறப் பட்டுள்ளது.