india

img

கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது வழக்குப்பதிவு!

கர்நாடகா,நவம்பர்.09- கர்நாடகா முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது முறைகேடு  வழக்கு பதிய டி குன்ஹா ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
கோவிட் காலகட்டத்தில் பிபிஇ கிட் கொள்முதல் முறைகேடு தொடர்பாக பாஜகவைச் சேர்ந்த கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா மற்றும் அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் பி.ஸ்ரீராமலு மீது வழக்குப் பதிய நீதிபதி ஜான் மைக்கல் டி குன்ஹா தலைமையிலான ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
இவர் மீது ஏற்கனவே பல முறைகேடு வழக்குள் மற்றும் போக்சோ வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.