india

img

தாராதேவி வனப்பகுதியில் 5வது நாளாக தொடரும் காட்டுத் தீ

சிம்லாவில் உள்ள தாராதேவி வனப்பகுதியில் தொடர்ந்து 5வது நாளாக காட்டுத் தீ வேகமாகப் பரவி வருகிறது. 

ஹிமாசலப் பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாகக் கோடை வெயில் கடுமையாகச் சுட்டெரித்து வருவதால் வனப்பகுதிகள் வறண்டு வருகிறது. இந்நிலையில், சிம்லாவில் உள்ள தாராதேவி வனப்பகுதியில் கடந்த செவ்வாயன்று காட்டுத் தீ ஏற்பட்டது. தீயை அணைக்க தீயணைப்புப் படையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 5 நாட்களாக தொடர்ந்து எரியும் இந்த காட்டுத் தீயால் விலை மதிப்பற்ற மரங்கள், மூலிகைகள் எரிந்து நாசமாயின. பல ஆயிரம் ஏக்கரில் பற்றி எரியும் காட்டுத் தீயை அணைக்க ஹெலிகாப்டர்களை அனுப்புமாறு ஒன்றிய அரசுக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, நேற்று மாலை வரை 7 கிலோமீட்டர் பரப்பளவு வரை தீயால் முற்றிலும் சேதம் அடைந்துள்ளது.