ஜம்மு - காஷ்மீரின் ஸ்ரீநகரில் அதிகப்படியான குளிர் நிலவி வருவதால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இந்தியாவின் குளிர் பிரதேசம் பகுதிகளில் ஒன்றான ஜம்மு-காஷ்மீரில் ஆண்டுதோறும், டிசம்பர் மாதத்தில் கடும் பனிபொழிவுடன் குளிர் நிலவுவது வழக்கம். அந்தவகையில் ஸ்ரீநகரில் பல இடங்களில் வெப்பநிலை -4.1 டிகிரி செல்சியஸாகக் குறைந்து, அதிகப்படியான குளிர் நிலவி வருகின்றது. இதனால் மக்களின் இயல்பை வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த கடுமையான குளிரை சமாளிக்க உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் குளிருக்கு ஏற்ப ஆடைகளை அணிந்தும், நெருப்பு மூட்டி உடலை வெப்பப்படுத்தியும் வருகின்றனர்.