ஹைதராபாத்:
முன்களப் பணியாளர்கள், மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களைத் தொடர்ந்து, 2-ஆவது கட்டமாக மார்ச் 1 முதல் 60 வயதுக்கு மேற்பட்டோர், 45 வயதுக்கு மேற்பட்டோர் 59 வயதுக்குள் இருப்போருக்கு தடுப்பூசி போடும் பணி துவங்கியுள்ளது. \
இதில், பிரதமர் நரேந்திர மோடி தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில், பாரத்பயோடெக் நிறுவனம் தயாரித்த ‘கோவாக்சின்’ என்ற கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை போட்டுக் கொண்டார். தன்னைப்போல அனைவருமே தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்என்று அப்போது அவர் வலியுறுத்தினார்.இந்நிலையில், பிரதமர் மோடி பாரத்பயோடெக் நிறுவனத்தின் ‘கோவாக் சின்’ தடுப்பூசியைப் போட்டுக் கொண் டது தற்செயலாக நடந்ததா? அல்லது திட்டமிட்டதா? என்று மஜ்லிஸ் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி கேள்வி எழுப்பியுள்ளார்.
‘‘கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி 64 வயதுக்கு மேற்பட்டோருக்கு உரிய பலன் அளிக்கவில்லை எனவும், 18 முதல் 64 வயது வரை உள்ளவர்களுக்கு மட்டுமே பலன் அளிக்கிறது எனவும் ஜெர்மனி அரசு கூறியிருந்தது.இந்த நிலையில், கோவிஷீல்டை தவிர்த்து, பிரதமர் மோடி பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசியை எடுத்துக் கொண்டிருப்பது தற்செயலாக நடந்ததா? என்ற கேள்வி எழுகிறது.இந்த குழப்பத்தை அரசு தெளிவுபடுத்த வேண்டும்” என்று ஓவைசி கேட்டுக் கொண்டுள்ளார்.அனைத்து மக்களும் கொரோனா தடுப்பு மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதே தனது கருத்து என்றும், மக்களிடம் இதனை வலியுறுத்திக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.