india

img

படுக்கைகள் உள்ளதாக கூறும் குஜராத் அரசு நோயாளிகளுக்கு ஏன் வழங்கவில்லை? நீதிமன்றம் கேள்வி

அகமதாபாத்:
கோவிட் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க போதுமான படுக்கைகள் மாநிலத்தில் உள்ளன என்ற குஜராத் அரசாங்கத்தின் கூற்றை உயர்நீதிமன்றம் கடுமையாக விமர்சித்துள்ளது.

நோயாளிகளுக்கு போதுமான படுக்கைகள் இருந்தால் ஏன் மருத்துவமனையில் அவர்கள் அனுமதிக்கப்படவில்லை என்று நீதிமன்றம் கேட்டது.பொது நல வழக்குகள் மீதான விசாரணையின்போது, 79,944 படுக்கைகளில் 55,783 இல் மட்டுமே நோயாளிகள் உள்ளதாகவும், மீதமுள்ளவை காலியாக உள்ளன என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து இந்த விமர்சனம் எழுந்தது. நோயாளிகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவதில்லை என்று புகார்கள் வந்துள்ளன. ஆனால் படுக்கைகள் காலியாக இருப்பதாக நீங்கள் கூறுகிறீர்கள். நோயாளிகள் ஏன் சிகிச்சைக்காக ஓட வேண்டும் என்று நீதிமன்றம் கேட்டது. மோசமானநிலையில் உள்ள நோயாளிகளுக்கு 108 ஆம்புலன்ஸ்கள் சரியான நேரத்தில் கிடைக்கவில்லை என்றும் நீதிமன்றம் விமர்சித்தது. 108 ஆம்புலன்ஸ்களுக்கு பதிலாக தனியார் வாகனங்களில் வரும் நோயாளிகளுக்கு அரசு மருத்துவ மனை ஏன் சிகிச்சை மறுக்கிறது என்றும் நீதிமன்றம் கேட்டது.