குஜராத் மாநிலத்தின் 4 நகரங்களில் இரவு நேர பொதுமுடக்கத்தை அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
கடந்த சில தினங்களாக கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.
இந்நிலையில், குஜராத் மாநிலத்தின் ஆமதாபாத், ராஜ்கோட், சூரத் மற்றும் வதோதரா ஆகிய பகுதிகளில் மார்ச் 17 முதல் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
இந்த பொதுமுடக்கம் மார்ச் 31 வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.