புதுதில்லி:
தில்லியில் மருத்துவ மாணவிநிர்பயா பாலியல் வன்கொலை செய்யப்பட்டபோது, நாடாளுமன்றத்தை யே முடக்கிய பாஜக, தற்போது அதேதில்லியில் 9 வயது சிறுமி கொல்லப்படும் போது வாய் திறக்காதது ஏன்?என்று சிவசேனா மூத்தத் தலைவரும், அக்கட்சியின் எம்.பி.யுமானசஞ்சய் ராவத் கேள்வி எழுப்பியுள் ளார்.
இதுதொடர்பாக சிவசேனாவின் ‘சாம்னா’ பத்திரிகையில் சஞ்சய் ராவத் மேலும் கூறியிருப்பதாவது:
“கடந்த 2012-13 ஆம் ஆண்டில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கியமுற்போக்குக் கூட்டணி ஆட்சியில் இருந்தபோது, மருத்துவ மாணவி நிர்பயா கும்பல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட நிகழ்வின்போது பாஜக ஆர்ப்பாட்டங்கள் நடத்தியது மட்டுமன்றி நாடாளுமன்றத்தையே முடக்கியது. ஆனால், தில்லியில் கடந்த வாரம் 9 வயதுச் சிறுமி வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். ஆனால், இந்தவிவகாரத்தில் பாஜக மவுனம் காத்து இரட்டை நிலைப்பாடு எடுக்கிறது.9 வயதுச் சிறுமி வல்லுறவு செய்யப்பட்டு கொடூரமாகக் கொல்லப் பட்டுள்ளார். ராகுல் காந்தி உள்ளிட்டபல கட்சிகளின் தலைவர்கள் சிறுமியின் தாயாரைப் பார்த்து ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள். ஆனால், சிறுமியின் பெற்றோ ரைச் சந்திப்பதை பாஜக அங்கீகரிக்க வில்லை. அந்த சந்திப்புகளை வெட்கக்கேடு என்கிறது. சிறுமியின் குடும்பத்தாரை ராகுல் காந்தி சந்தித்ததை, அரசியலாக்குகிறார் என்றுபாஜக கூறுகிறது. அப்படியென் றால், பாதிக்கப்பட்ட குடும்பத்தின ருக்கு ஆறுதல் தெரிவிக்கக் கூடாதா,இரக்கம், கருணை காட்டக்கூடாதா?
பாஜக ஆளும் உத்தரப்பிர தேசத்தின் ஹத்ராஸிலும் இதேபோல தலித் இளம்பெண் கொல்லப்பட்டபோதும், அவர்களின் பெற்றோரைக் காணச் சென்ற காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தடுத்து நிறுத்தப்பட்டார். தற்போது, குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையமும் ஒருதலைப் பட்சமாக நடந்துகொண்டு ராகுல் காந்தி தொடர்பாக டுவிட்டர் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பி யுள்ளது. இவ்வாறு சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.