india

img

தமிழ்நாட்டைப் பிரிக்கும் திட்டம் இல்லை... கோரிக்கையும் வரவில்லை... ஒன்றிய அமைச்சர் விளக்கம்...


புதுதில்லி,ஆக.3-
தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்கும் திட்டம் ஒன்றிய அரசின் பரிசீலனையில் இல்லை என்று ஒன்றிய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் விளக்கம் அளித்துள்ளார். தமிழ்நாட்டை பிரித்து கொங்கு நாடு அமைப்பது குறித்து தமிழக பாஜக தலைவர்கள்  சிலர் கோரிக்கை
கள் எழுப்பி, விசித்திரமான விளக்கங்களை அளித்து வந்தனர். இதற்கு தமிழ்நாட்டு மக்கள் மற்றும் கொங்கு பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, பாஜகவினரை கண்டித்தனர்.  மக்களின் கோபத்திற்கு ஆளானதால்  தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்கும் எண்ணம் இல்லை என்று மோடி அரசு அறிவித்துள்ளது.  இந்த விவகாரம் தொடர்பாக தமிழக எம்.பி.க்கள்எஸ்.ராமலிங்கம், பாரிவேந்தர் ஆகியோர் எழுத்துபூர்வ மாக  எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய உள்துறை இணையமைச்சர்   நித்தியானந்த் ராய் எழுத்துபூர்வமாக அளித்தபதிலில்,  தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்கும் திட்டம் தற்போதும் ஏதும் ஒன்றிய அரசின் பரிசீலனையில் இல்லை. தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்கும் வகையில் எந்த கோரிக்கையும் வரவில்லை; எந்த கோரிக்கையும் பரிசீலனையில் இல்லை என்று தெரிவித்துள்ளார்.