மேற்குவங்க வன்முறை சிபிஐ 31 வழக்குகள் பதிவு!
மேற்கு வங்க மாநிலத்தில், தேர்தலுக்குப் பிந்தைய வன்முறைகள் தொடர்பாக, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில், கொல் கத்தா, வடக்கு பர்க்னா,பன்குரா, நதியா, கூச் பிஹர் ஆகிய மாவட்டங்களில் நடந்த வன்முறைச் சம்பவங்கள்தொடர்பாக சிபிஐ இதுவரை 31 வழக்குகளைப் பதிவு செய்துள்ளது.
***************
காதல் கடிதம் போன்றதே அமலாக்கத்துறை சம்மன்!
“அமலாக்கத்துறை சம்மன் என்பது அரசியல்வாதிகளுக்கு அனுப்பப்படும் காதல் கடிதம் போன்றது. அதுமரண வாரண்ட் கிடையாது. வலுவான மற்றும்அசைக்க முடியாத மகாவிகாஸ் அகாதி அரசின் கோட்டைச் சுவரைஉடைக்க எடுத்த முயற்சிகள் தோல்வியுற்ற பிறகு, இதுபோன்று காதல் கடிதங்கள் அதிகரித்துள்ளன. பாஜக-வைப்பொறுத்தவரை அக்கட்சியை சேர்ந்தவர்அமலாக்கத்துறையில் அதிகாரியாக இருக்க வேண்டும் அல்லது அமலாக்கத் துறை அதிகாரி பாஜக அலுவலகத்தில் வேலை செய்யவேண்டும்” என்று சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் விமர்சித்துள்ளார்.
***************
நீதிமன்ற உத்தரவை மதிக்காத ரானே!
மகாராஷ்டிர முதல் வர் உத்தவ் தாக்கரே-வை அறைவேன் என்றுகூறியதற்காக தொடரப்பட்ட வழக்கில், ஒன் றிய பாஜக அமைச்சர் நாராயண் ரானே ஆகஸ்ட் 30-ஆம் தேதியும், செப்டம்பர் 13-ஆம் தேதியும் ராய்கட்காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், அமைச்சர் ரானே திங்களன்று விசாரணைக்கு ஆஜராகவில்லை.
***************
விவசாயிகள் மண்டையை உடைத்தது சரிதான்...
“போராட்டம் நடத் திய விவசாயிகளின் மண்டையை உடைக்குமாறு ஐஏஎஸ் அதிகாரி கூறிய வார்த்தைகள் தவறானதுதான். அதே நேரத்தில் சட்டம் - ஒழுங்கைக் காப்பாற்ற வேண்டியது அரசின் கடமை. மேலும் அதற்கு கண்டிப்பான நடவடிக்கைகள் எடுக்க வேண்டியதும் அவசியமானது. முதல்வர் ஒரு இடத்துக்கு வரும்போது அவரை விட மாட்டோம் என்று சிலர் கூறினால் அதை அனுமதிக்க முடியுமா?” என்றுஹரியானா பாஜக முதல்வர் மனோகர் லால் கட்டார், கர்னால் சார்-ஆட்சியர் ஆயுஷ் சின்ஹாவுக்கு முட்டுக் கொடுத் துள்ளார்.
***************
‘யு’ டர்ன் அடிக்கும் பாஜக எம்எல்ஏ-க்கள்!
திரிணாமுல் காங்கிரசிலிருந்து பாஜகவுக்கு சென்று, கடந்த தேர்தலில் எம்எல்ஏவும் ஆனவர் முகுல் ராய். இவர் கடந்தமாதம் மீண்டும் திரிணாமுலுக்கு திரும்பினார். அந்த வரிசையில் தற்போது தன்மய்கோஷ் என்ற பாஜக எம்எல்ஏ-வும் திரிணாமுல் கட்சியில் சேர்ந்துள்ளார். இவரும் புறப்பட்ட இடத்திற்கே திரும்பி வந்துள் ளார். “மேற்கு வங்க மக்களுக்குத் தீங்குவிளைவிக்கும் கட்சியாக பாஜக உள்ளது.பழிவாங்கும் அரசியல் மூலம் மாநிலத்தில்பிரச்சனையை ஏற்படுத்துவது மட்டுமேபாஜகவின் கொள்கையாக உள்ளது” என்றும் திடீரென அவர் கண்டுபிடித்துள்ளார்.