வெளிநாட்டுப் பயணத்தை துவங்குகிறார் மோடி
பிரதமர் நரேந்திர மோடி, நீண்ட இடைவேளைக்குப் பிறகு, மீண்டும் வெளிநாட்டுப் பயணத்தை துவங்க உள்ளார் என்றும், அனேகமாக செப்டம்பர் 23, 24 தேதிகளில் அவர்அமெரிக்கா செல்லலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அவ்வாறு செல்லும்பட்சத்தில், ஐ.நா. அவையின் ஆண்டுப் பொதுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்கும் மோடி, அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி ஜோ பைடனையும் சந்தித்துப் பேசுவார் என்று கூறப்படுகிறது.
***************
சாதிவாரி கணக்கெடுப்பு காங்கிரஸ் குழு அமைப்பு
சாதிவாரி கணக்கெடுப்பு கோரிக்கை தொடர்பாக காங்கிரஸ் கட்சிக் குள் ஆய்வு நடத்த, 7 பேர் கொண்டகுழுவை, சோனியா காந்தி ஏற்படுத்தியுள்ளார். மூத்தத்தலைவர் திக் விஜய்சிங்-கை அமைப்பாளராகக் கொண்ட இந்தகுழுவில், மோகன் பிரகாஷ், ஆர்.பி.என்.சிங், குல்தீப் பிஷ்னோய், வீரப்ப மொய்லி,அபிஷேக் சிங்வி, சல்மான் குர்ஷித் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
***************
ஜெயப்பிரகாஷ் நாராயணன் பாடத்தை நீக்குவதா?
பீகார் மாநிலம் சரண்மாவட்ட பல்கலைக்கழகத்தில் ராம் மனோகர் லோஹியா மற்றும் ஜெயப்பிரகாஷ் நாராயணன் ஆகியோரது சோசலிச கொள்கைகள் அடங்கிய பாடத் திட்டம்நீக்கப்பட்டு இருப்பதற்கு, ஐக்கிய ஜனதாதளத்தைச் சேர்ந்த அம்மாநில கல்விஅமைச்சர் விஜய்குமார் சவுத்ரி கண்டனம் தெரிவித்துள்ளார். ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்த தீனதயாள் உபாத்யாயின் சிந்தனைகளை புதிதாக பாடத் திட்டத்தில்சேர்க்கக் கூடாது என்பது எங்கள் நோக்கமல்ல. அதே நேரம் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த தலைவர்களின் சிந்தனைகள்புறக்கணிக்கப்படக் கூடாது என்று அவர்தெரிவித்துள்ளார்.
***************
துர்கா பூஜை பந்தலில் மம்தா பானர்ஜி சிலை
மேற்கு வங்கத்தில் துர்கா பூஜை விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான துர்கா பூஜை அக்டோபரில் வரவுள்ளது. இந்நிலையில், துர்கா பூஜைக் கான பந்தலில், துர்கா தேவி சிலையுடன் முதல்வர் மம்தா பானர்ஜியின் சிலையையும் வைத்து பூஜை செய்ய நிகழ்ச்சிஏற்பாட்டாளர்கள் முடிவு செய்துள்ளனர். இதற்காக பிரபல சிற்பியான மிண்டு பால்மூலம், மம்தாவுக்கு மிகவும் விருப்பமானவெள்ளை புடவை மற்றும் ரப்பர் செருப்புடன் கூடிய அவரது சிலை உருவாகி வருகிறது. இதற்கு பாஜக-வினர் கடும் எதிர்ப்புதெரிவித்துள்ளனர்.
***************
புதிய கல்விக் கொள்கை சித்தராமையா எதிர்ப்பு
“கல்வியாளர்கள், பெற்றோர்கள், மாணவர்களுடன் ஆலோசிக்காமல், கர்நாடக அரசு, புதிய கல்விக் கொள்கையை திடீரென்று அமல் படுத்தி இருக்கிறது. இது சரியான முடிவு அல்ல. இந்த புதியகல்வி கொள்கையால் சாதாரண ஏழை, கிராமப்புற மாணவ, மாணவிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும்” என்று கர்நாடகமுன்னாள் முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார்.