india

img

தீக்கதிர் விரைவுச் செய்திகள்....

ஜிடிபி வளர்ச்சி கணிப்பை குறைத்தது எஸ்பிஐ!

நடப்பு 2021-22 நிதியாண்டின் முதலாவது காலாண்டில் நாட்டின் ஜிடிபி விகிதம் 18.5 சதவிகிதமாகவே இருக் கும் என்று ‘ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா’ (SBI) வங்கியின் பொருளாதார ஆராய்ச்சி துறை கணித்துள்ளது. முன்பு இதனை 21.4 சதவிகிதமாக கணித்திருந்த நிலையில், அதனை எஸ்பிஐ-யின் தலைமை பொருளாதார ஆலோசகர் சவும்யா கந்தி கோஷின் அறிக்கை கணிசமாக குறைத்துள்ளது.

                                 ***************

ரானே கருத்தில்  உடன்பாடு இல்லை!

உத்தவ் தாக்கரேவை அறைவேன் என்ற நாராயண் ரானே கருத்தில் உடன்பாடு இல்லை; எனினும் தனிநபராகவும் கட்சி ரீதியாகவும் அவருக்கு ஆத ரவாக இருக்கிறோம் என்று மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார். “ஷார்ஜில் உஸ்மானி பாரத மாதாவை இழிவுபடுத்தினார். ஆனால் அவருக்கு எதிராக எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

                                 ***************

அனைத்து சொத்துக்களும் மோடியின் நண்பர்களுக்கே!

“ஒன்றிய அரசு அனைத்தையும் தனதுகோடீசுவர நண்பர் களுக்காகவே செய்து வருகிறது. தற்போது 70 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் உருவாக்கிய லட்சக்கணக் கான கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களையும் தங்கள் கோடீசுவர நண்பர்களுக்கு வாரி வழங்குகிறது” என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்திசாடியுள்ளார். “சுயசார்பு பற்றி வார்த்தைஜாலம் காட்டும் ஒன்றிய அரசு, ஒட்டு மொத்த அரசையும் தங்கள் கோடீசுவர நண்பர்களை சார்ந்து இருக்கும் வகையில் மாற்றி இருக்கிறது” என்றும் பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

                                 ***************

நாட்டின் சொத்துக்கள்  பாஜக உடையது அல்ல!

“நாட்டின் சொத்துக் களை குத்தகைக்கு விட்டு ரூ. 6 லட்சம் திரட்டுவது துரதிருஷ்டவசமான முடிவு. இந்த செய்தியைக் கண்டு அதிர்ச்சி அடைந்தேன். இந்த முடிவை கண்டித்து பலர்என்னுடன் இணைவார்கள்” என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். “நாட்டின் சொத்துக்கள் ஒன்றும் பாஜகவின் சொத்துக்கள் அல்ல; என்றும்அவற்றை மோடி அரசு விற்க முடியாது” என்றும் மம்தா குறிப்பிட்டுள்ளார்.

                                 ***************

இந்த ஆண்டிற்குள் இந்தியாவில் பிரளயம்?

ஆள்கடத்தல், பாலியல் வழக்கில் போலீசாரால் தேடப்படும் சாமியார் நித்தியானந்தா, ஆன்-லைன் நேரலையில் அருளாசி வழங்கியுள்ளார். அப்போது, “இந்தியா, மலேசியா, நேபாளம், இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்குள் யாரும் நுழையாதீர்கள். பிரளயம் முடிந்து அனைத்தும் அடங்கும் வரைவாழ்க்கை புதுமையாய் மலரும் வரை இந்த 4 நாட்டிற்குள்ளும் யாரும் சொல்லாதீர்கள்” என்று பயமுறுத்தியுள்ளார்.