india

img

முறையான தடுப்பூசிக் கொள்கை அவசியம்... ராகுல் காந்தி வலியுறுத்தல்....

புதுதில்லி:
இந்தியாவுக்கு முறையான தடுப்பூசிக் கொள்கை அவசியம் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி எம்.பி., வலியுறுத்தி யுள்ளார். 

பல்வேறு மாநி லங்களில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மத்திய மோடி அரசு தடுப்பூசிகளை கொள்முதல் செய்து வழங்காமல், மிகவும் மெத்தனமாக ஆலோசனைக்கூட்டம் மட்டுமே நடத்தி ஒதுங்கிக்கொள்கிறது என்று அரசியல் கட்சியினரும் மக்களும்சாடுகின்றனர். மத்திய பாஜகஅரசை நம்பி பயனில்லை என்று கருதி, தமிழக அரசும் மும்பை மாநகராட்சியும் கொரோனா தடுப்பூசிகளை வாங்குவதற்கு உலகளாவிய டெண்டர்களை வெளி யிட்டுள்ளது. 

இந்நிலையில் மத்திய அரசின் பேரழிவுதரும் தடுப்பூசிக் கொள்கையால், நாட்டில் மூன்றாவது அலை வருவதை உறுதி செய்யும் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.மத்திய அரசின் தடுப்பூசிக் கொள்கை தவறானது என்று காங்கிரஸ் கட்சி தொடர்ந்து விமர்சித்து வரும் நிலையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி டிவிட்டரில், மத்திய அரசின் பேரழிவு தரும் தடுப்பூசிக்கொள்கை, நாட்டில் கொரோனா மூன்றா வது அலை வருவதை உறுதிசெய்கிறது. இந்தியாவுக்கு முறையான தடுப்பூசி கொள்கை அவசியம்.1,140 கிலோமீட்டர்  நீளத்தில் பரந்திருக்கும் கங்கை நதியில் 2 ஆயிரம்உடல்கள் மிதந்தாக ஊட கங்கள் தெரிவிக்கின்றன. தன்னை கங்கை என அழைத்துக்கொண்ட ஒருவர், தற்போது கங்கை தாயைகண்ணீர்விட வைத்துள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.