புதுதில்லி:
நாட்டில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. ஆனால் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன்தட்டுப்பாடு, கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு, ரெம்டெசிவிர் மருந்து, மருத்துவமனையில் படுக்கைகள் கிடைக்காமல் நோயாளிகள் அவதிப்பட்டு வருகின்றனர். பிச்சை எடுத்தாவது நோயாளிகளுக்கு ஆக்சிஜன் கிடைக்க ஏற்பாடு செய்யுங்கள் என்று மத்திய அரசை, உயர்நீதிமன்றம் இடித்துக்கூறியுள்ளது.
இந்நிலையில் மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி வெள்ளியன்று அவசர ஆலோசனை நடத்தினார். கொரோனா பரவல் அதிகமுள்ள மாநிலங்களை சேர்ந்த முதல்வர் இந்தஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டனர்.. காணொலிக் காட்சி மூலம் நடைபெற்ற இக்கூட்டத்தில் தமிழக அரசு தரப்பில்தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் பங்கேற்றார்.