india

img

ஒமைக்ரான் - எக்ஸ்இ வைரஸ் வேகமாக பரவும் தன்மை கொண்டாலும், உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தாது : இந்திய நுண்ணுயிரியல் நிபுணர் தகவல்

தில்லி
பிரிட்டனில் உருமாறியுள்ள ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் உலக நாடுகளில் மீண்டும் கலக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. ஒமைக்ரான் - எக்ஸ்இ என்று பெயர் சூட்டப்பட்டுள்ள நிலையில், இந்த வைரஸ் பற்றி வேலூரில் உள்ள கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரியின் நுண்ணுயிரியல் துறை பேராசிரியர் ககன்தீப் காங் விளக்கம் அளித்துள்ளார்.

இது பற்றி அவர் கூறியுள்தாவது"ஏன் புதிய வகை வைரஸைப் பார்த்து அச்சப்பட வேண்டும்? வைரஸ் என்றாலே உருமாறி கொண்டே இருக்கும். தற்போது பரவி வரும் ஒமைக்ரான்-எக்ஸ்இ வேகமாக பரவும் தன்மை கொண்டாலும், உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கவில்லை. எனவே ஒமைக்ரான்-எக்ஸ்இ பற்றி அச்சப்படத் தேவையில்லை. அதிகம் பரவும் என்பது ஒரு விஷயமேயில்லை. அதிகமானோர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டிருக்கும் நிலையில், நான் கூட அது பற்றி அதிகம் கவலைப்படவில்லை" என பேராசிரியர் ககன்தீப் காங் விளக்கம் அளித்துள்ளார்.

ஒமைக்ரான்-எக்ஸ்இ வைரஸ் என்பது ஒமைக்ரானின் பிஏ.1 மற்றும் பிஏ.2 வின் கூட்டுச் சேர்க்கையாக உள்ளது. இது ஒமைக்ரானை விட 10 மடங்கு கூடுதலாக பரவும் தன்மை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.