புதுதில்லி:
2022ஆம் ஆண்டு 5 மாநில சட்டமன்ற தேர்தலை நடத்துவோம் என்று தலைமை தேர்தல் ஆணையர் சுசில் சந்திரா தெரிவித்துள்ளார். தமிழகம் உள்பட 5 மாநில சட்டமன்ற தேர்தல்கள் நடத்தியதே, கொரோனா தொற்று தீவிரமாக பரவ காரணம் என்று பொதுமக்கள் மட்டுமின்றி, உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றமும் குற்றம்சாட்டியது.
இந்நிலையில் தலைமை தேர்தல் ஆணையர் சுசில் சந்திரா கூறுகையில், அடுத்தாண்டு மார்ச் மாத வாக்கில் 5 மாநிலங்களில் தேர்தலை நடத்துவோம். கொரோனா உச்சம் பெற்றிருந்த நிலையிலும், பீகார் தேர்தலை 2020 ஆம் ஆண்டு வெற்றிகரமாக நடத்தினோம். 2021ம் ஆண்டு மேற்கு வங்க தேர்தலை நடத்தினோம். அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ள கோவா, மணிப்பூர், உத்தர்கண்ட் மாநில தேர்தல்கள் மார்ச் மாதத்திற்குள் நடத்தப்படும். உத்தப்பிரதேச மாநில சட்டமன்ற தேர்தல் மற்றும் பஞ்சாப் மாநில சட்டமன்ற தேர்தல்கள் நடைபெறும் .ஆட்சி முடியும்காலத்திற்குள் நாங்கள் தேர்தல் நடத்தி, வெற்றி பெற்ற வேட்பாளர்கள் பட்டியலை அந்தந்த மாநில ஆளுநர்களிடம் பட்டியலை தாக்கல் செய்ய வேண்டும். ஏற்கனவே பீகார் மற்றும் ஐந்து மாநிலங்களில் கொரோனா தொற்றிற்கிடையே தேர்தலை நடத்தியுள்ளோம். அதற்கான அனுபவம் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.