பாட்னா:
2014-ஆம் ஆண்டு மத்தியில் நரேந்திர மோடி அரசு ஆட்சிக்கு வந்ததும்,கங்கையைத் தூய்மைப்படுத்துவதற்காக, உலக வங்கி நிதியுதவியுடன்‘தேசிய கங்கை தூய்மை இயக்கம்’ எனப்படும் ‘நமாமி கங்கா’ (Namami Gange) திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
நதியை முழுமையாகத் தூய்மைப்படுத்தி புத்துயிர் ஊட்டுவதற்காக 20 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடும் செய்யப்பட்டது. கங்கையையொட்டி, 17 ஆயிரம் கோடி ரூபாயில் கழிவு நீர் மேலாண்மை, தொழில்துறைக் கழிவுகளை நிர்வகித்தல், பல்லுயிர்ப் பெருக்கம், பயிர் வளர்ப்பு, திடக்கழிவு மேலாண்மை, காடு வளர்ப்பு, கிராமப்புறத் தூய்மை,ஆறுகளின் முகப்பு மேலாண்மை, பாதை மற்றும் மயானங்களை மேம்படுத்துவது மற்றும் திருத்தி அமைப் பது போன்றவை இத்திட்டத்தில் அடங்கும்.
அந்த வகையில், பீகார் மாநிலம்பாட்னாவில், ‘நமாமி கங்கா’ திட்டத்தின் ஒரு பகுதியை செயல்படுத்துவதற்கான- ஆயிரத்து 187 கோடி ரூபாய் காண்ட்ராக்ட் பன்னாட்டு நிறுவனமான ‘விஏ டெக் வபாக்’ (VA TECHWABAG LTD) நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.திகா - கன்கர்பாக் இடையிலான 453 கி.மீ. தூரத்துக்கு சுத்திகரிப்புப் பணியை மேற்கொள்வதற்கான ஒப் பந்தம் இதுவாகும். இதன்படி வபாக் நிறுவனம் அடுத்த 24 மாதங்களில், கழிவுநீரை சுத்திகரிக்கும் ஆலையை (ஹாம்) 24 மாதங்களில் அமைத்து, தொடர்ந்து 15 ஆண்டுகளுக்கு பணிகளை மேற்கொள்ளும். நாளொன்றுக்கு 150 கோடி லிட்டர் தண்ணீரை இந்நிறுவனம் சுத்தப்படுத்தும் என்பதுடன், கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலையிலிருந்து பயோகேஸ் உற்பத்தியும் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.திட்ட மதிப்பீட்டில் 40 சதவிகிதம் என்எம்சிஜி மானியம் மூலம் கிடைக் கும் என்ற நிலையில், எஞ்சிய மூலதனத்தைத் திரட்டுவதற்கு வபாக் நிறுவனம் ‘பிடிசி இந்தியா’ நிதிசேவை நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய் துள்ளது.