india

img

செப்.12-ல் நீட் தேர்வு... ஒன்றிய அரசு அறிவிப்பு..

புதுதில்லி:
நாடு முழுவதும் செப்டம்பர் 12 ஆம்தேதி மருத்துவப்படிப்பு சேர்க்கைக் கான நீட் நுழைவுத் தேர்வு நடைபெறும் என்று ஒன்றிய அரசு அறிவிப்புவெளியிட்டுள்ளது. நீட் தேர்வு எழுதமாணவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று ஒன்றிய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கு இந்தியா முழுவதும் நீட்தேர்வை  ஒன்றிய அரசு கட்டாயமாக்கியுள்ளது. இத்தேர்வுக்கு தமிழகம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.  இந்தஆண்டுக்கான  நீட் தேர்வு கொரோனாஅச்சுறுத்தல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டதுஇந்நிலையில் ஜூலை 12 அன்றுதேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளஅறிவிப்பில்,  நீட் தேர்வு வரும் செப்டம்பர் 12 ஆம் தேதி அன்று கொரோனா கட்டுப்பாட்டு விதிகளுடன் நடைபெற உள்ளது .  தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் ஜூலை 13 மாலை 5 மணி முதல் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வசதியாகத் தேர்வு நடக்க உள்ளநகரங்கள் எண்ணிக்கை 155லிருந்து 198 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.  மேலும்தேர்வு மையங்களின் எண்ணிக்கையும் 3862 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.கொரோனா கட்டுப்பாட்டு விதிகளின் படி தேர்வு மையங்களில் அனைத்து தேர்வர்களுக்கு முகக் கவசம் வழங்கப்பட உள்ளது.  தேர்வுமையங்களுக்குள் நுழையும் மற்றும் வெளியேறும் நேரங்கள் சரியாக கடைப்பிடிப்பது, தொடர்பு இல்லாத பதிவுகள், சரியான சுகாதார அமைப்பு,சமூக இடைவெளியுடன் கூடிய இருக்கைகள் ஆகியவை பின்பற்றப்பட உள்ளன.