புதுதில்லி:
மத்தியில் ஆளும் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு, கூட்டாட்சி என்ற கட்டமைப்பையே சீர்குலைத்து விட்டதாக சிரோமணி அகாலிதளம் கட்சியின் மூத்தத் தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான பிரேம்சிங் சந்துமாஜ்ரா குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து ஏஎன்ஐ செய்திநிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் அவர் மேலும் கூறியிருப்ப தாவது:
“பஞ்சாப் முதல்வர் கேப்டன்அம்ரீந்தர் சிங்குடன் எங்களுக்குஅரசியல் வேறுபாடுகள் உள்ளன. ஆனால் மாநிலத்திற்குச் சேர வேண்டிய ஊரக வளர்ச்சி நிதியை அளிக்காமல் மத்திய அரசு தடுத்து நிறுத்துவதை நாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். பஞ்சாப்பிற்கான ஊரக வளர்ச்சி நிதிஒதுக்கீட்டை, மத்திய அரசுதடுத்து நிறுத்துவது அரசியலமைப்பிற்கு விரோத மானது.இந்த நாடு, ஒற்றையாட்சி முறையை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாக எங்கள்கட்சி பார்க்கிறது. இது நாடாளு மன்ற அமைப்பிலிருந்து அதிபர் ஆட்சி வடிவிலான அரசாங்கத்தை நோக்கி நகர்வதற்கான அறிகுறியாக இருக்கிறது. இது நல்ல முறை அல்ல.பட்ஜெட்டில் பல்வேறு தலைப்பிலான அத்தியாவசிய செலவினங்களுக்கு செலவழிக்க மாநிலங்களை அனுமதிக்கா ததன் மூலம் கூட்டாட்சி என்ற கட்டமைப்பையே மத்தியில் ஆளும் பாஜக சீர்குலைத்து வருவது குறித்து எதிர்க்கட்சியின ரிடமும், பாஜக தோழமைக் கட்சிகளிடமும் நாங்கள் கருத்துக் களைப் பகிர்ந்து வருகிறோம்.இவ்வாறு பிரேம்சிங் சந்து மாஜ்ரா கூறியுள்ளார்.சிரோமணி அகாலிதளம், கடந்த 2020 செப்டம்பர் வரை, பாஜக தலைமையிலான என்டிஏகூட்டணியில்தான் அங்கம் வகித்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.