புதுதில்லி:
2021 ஆம் ஆண்டுக்கான அகில இந்திய பார் தேர்வு மார்ச் 21ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய பார் கவுன்சில் அறிவித்துள்ளது.கொரோனா தொற்று அச்சத்தால் 2020 ஆம் ஆண்டுக்கானஅகில இந்திய பார் தேர்வு (All India Bar Exam-XV) பலமுறை தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் இந்திய பார் கவுன்சில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
‘திட்டமிட்ட தேதியில் 2020 ஆம் ஆண்டுக்கான அகில இந்திய பார் தேர்வு நடைபெறும். இனி தேர்வு தேதியில் எந்த மாற்றமும் இருக்காது. நாடு முழுவதும் 50 நகரங்களில் 140 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெற உள்ளது. அதேபோல 2021 ஆம் ஆண்டுக்கான தேர்வு (All India Bar Exam-XVI) அதே ஆண்டில் மார்ச் 21 ஆம் தேதிநடைபெற உள்ளது. இதற்காக டிசம்பர் 26 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி 21 ஆம் தேதி கடைசி தேதியாகும். பிப்ரவரி 23 வரை கட்டணம் செலுத்தலாம்.மார்ச் 6 ஆம் தேதி நுழைவுச் சீட்டுகளைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அகில இந்திய பார் தேர்வு மார்ச் மாதம் 21 ஆம் தேதி நடைபெறும்’. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.