மேற்கு வங்க மாநிலம் துர்காபூரில் செயல்பட்டு வரும் மத்திய இயந்திர பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள டெக்னிக்கல் அசிஸ்டெண்ட் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்த விபரங்கள் பின்வருமாறு
வேலைவாய்ப்பு அறிவிப்பு எண். 04/2021
நிறுவனம்: central Mechanical Engineering Research Institute
பணி: Technical Assistant
காலியிடங்கள்: 22
சம்பளம்: மாதம் ரூ.53,988
வயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், சிவில், ஆட்டோமொபைல் போன்ற ஏதாவதொரு பிரிவில் குறைந்தபட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் டிப்ளமோ முடித்து 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, தொழிற் திறன் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. பாரத ஸ்டேட் வங்கி மூலம் ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, பெண்கள், முன்னாள் ராணுவத்தினர் பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.
விண்ணப்பிக்கும் முறை: www.cmeri.res.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.12.2021
மேலும் விவரங்கள் அறிய https://www.cmeri.res.in/sites/default/files/vacancy/Advt%20No.03_2021.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.