india

img

மேற்குவங்கத்தில் வன்முறையை என்னால் தடுக்க முடியவில்லை... மம்தா கட்சி எம்.பி. தினேஷ் திரிவேதி ஒப்புதல்

புதுதில்லி:
 மேற்குவங்க மாநிலத்தில் நடக்கும் வன்முறையைத் தடுக்க முடியாமல் இருப்பதால், எனக்கு வேதனையாக இருக்கிறது. ஆகையால் எனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்கிறேன் என்று திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. தினேஷ் திரிவேதி பிப்ரவரி 12 வெள்ளிக்கிழமையன்று மாநிலங்களவையில் அறிவித்தார்.

மேற்குவங்க மாநிலத்தில் ஆட்சியைத் தக்கவைக்க முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரும் ஆட்சியைப் பிடிப்பதற்காக திரிணாமுல் கட்சியின் பல்வேறு எம்.பி.,எம்எல்ஏக்களை தங்கள் பக்கம் வாங்கியுள்ள  பாஜகவும் மேற்கொள்ளும் நடவடிக்கையால் அரசியல் சார்ந்த வன்முறைச் சம்பவங்கள் நடக்கின்றன.இந்நிலையில் வெள்ளியன்று மாநிலங்களவையில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. தினேஷ் திரிவேதி பேசுகையில், “ என் மாநிலத்தில் வன்முறைச் சம்பவங்கள் நடக்கின்றன. அதைத் தடுக்க முடியாதவனாக என்ன செய்ய வேண்டும் என்று குழப்பத்தில் நான் இங்கு அமர்ந்திருக்கிறேன். இங்கு என்னால் எதையும் கூற முடியாது. ஆதலால், நான் என் எம்.பி. பதவியை ராஜினாமா செய்கிறேன். மேற்கு வங்கத்தில் நடக்கும் பல்வேறு சம்பவங்களை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்று  தெரிவித்தார்.