புதுதில்லி:
1901 ஆம் ஆண்டிலிருந்து கடந்த 20 ஆண்டுகளாக வெப்பம் அதிகரித்துள்ளது என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்திய வானிலை மையம் (ஐஎம்டி) வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
1901 ஆம் ஆண்டிலிருந்து 8-வது வெப்பமான ஆண்டாக 2020 ஆம் ஆண்டு அமைந்திருக்கிறது. 2006 ஆம் ஆண்டிலிருந்து 2020 ஆம் ஆண்டுக்கு இடையே 12 ஆண்டுகள்அதிகமான வெப்பம் இருந்தது.1901 முதல் 2020 ஆம் ஆண்டுவரை அதாவது 100 ஆண்டுகளில் சராசரியாக ஆண்டுதோறும் 0.62 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரித்து வருகிறது. இதில் அதிகபட்சமாக 0.99 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரித்துள்ளது. குறைந்தபட்சமாக அதிகரித்த வகையில் 0.24 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளது.
2020 ஆம் ஆண்டில் 0.29 டிகிரி செல்சியஸ்வெப்பம் அதிகரித்துள்ளது. 1901 ஆம் ஆண்டிலிருந்து 8-வது வெப்பமான ஆண்டாக 2020 இருந்தது. ஆனால், 2016 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது இது குறைவுதான். 2016- இல் 0.71 டிகிரி செல்சியல் வெப்பம் அதிகரித்திருந்தது. இதுவரை 2016 (0.70 டிகிரி செல்சியஸ்), 2009 (0.55 டிகிரி செல்சியஸ்), 2017 (0.541 டிகிரி செல்சியஸ்), 2010 (0.539 டிகிரி செல்சியஸ்), 2015 (0.42 டிகிரி செல்சியஸ்) ஆகிய ஆண்டுகள் வெப்பமான ஆண்டுகளாக இருந்து வருகின்றன. ஒட்டுமொத்த மாகப் பார்த்தால் கடந்த 20 ஆண்டுகளாக வெப்பம் அதிகரித்து வருகிறது.
இந்தியாவில் கடந்த ஆண்டு நீண்ட கால சராசரி அடிப்படையில், 1961-2000 ஆம் ஆண்டு புள்ளிவிவர அடிப்படையில் 109 சதவீதம் மழைப் பொழிவு பதிவாகியுள்ளது. இதுசராசரி மழைப்பொழிவுக்கும் அதிகமாகும். அதிலும் குறிப்பாக ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான தென்மேற்குப் பருவமழையில் 117.7 சதவீதம் மழை பதிவாகியுள்ளது.2020 ஆம் ஆண்டு வடகிழக்குப் பருவமழையில் நீண்டகால சராசரி அடிப்படையில் 101 சதவீதம் அதாவது சராசரி மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.