india

img

விவாதித்தது போதும்... தடுப்பூசியை மக்களுக்கு இலவசமாக செலுத்துங்கள்.... ராகுல் காந்தி வலியுறுத்தல்....

புதுதில்லி:
மத்திய அரசு விவாதித்தது போதும், தேசத்தில் உள்ள அனைத்து மக்களுக் கும் இலவசமாகத் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.

மே 1-ம் தேதி முதல் 18வயது முதல் 45 வயதுள்ளமக்கள் அனைவரும் தடுப் பூசி செலுத்திக்கொள்ள மத்திய அரசு அனுமதித்துள்ளது. தடுப்பூசி நிறுவனங்களே விலை வைக்கவும் அனுமதித்தது.இதன்படி, சீரம் நிறுவனம் தனது கோவிஷீல்ட் தடுப்பூசியை மத்திய அரசுக்கு ரூ.150 விலையிலும், மாநில அரசுகளுக்கு ரூ.400 விலையிலும், தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.600 விலையிலும் வழங்குவதாக அறிவித்தது. அதேபோல பாரத் பயோடெக் நிறுவனம் தனது கோவாக்சின் தடுப்பூசியை மத்திய அரசுக்கு ரூ.150 விலையிலும், மாநில அரசுகளுக்கு ரூ.600 விலையிலும், தனியாருக்கு ரூ.1200 விலையிலும் வழங்குவதாக அறிவித்தது. 

இந்நிலையில் காங்கிரஸ்எம்.பி. ராகுல் காந்தி அனைத்துமக்களுக்கும் இலவசமாகத் தடுப்பூசி வழங்கிட வேண் டும் என மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.டுவிட்டரில் ராகுல் காந்திபதிவிட்ட கருத்தில், “கொரோனா தடுப்பூசி குறித்து நீங்கள் விவாதித்தது போதும். நாட்டில் உள்ள மக்கள் அனைவருக்கும் இலவசமாகத் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும். பாஜகவின் நிர்வாக முறைக்கு இந்தியாவை பலிகடா ஆக்காதீர்கள்” எனத் தெரிவித்துள்ளார்.ஒரே தடுப்பூசி வெவ் வேறு விலையில் விற்பனை செய்யப்படுவதற்கு எதிர்க் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் ஆட்சேபம் தெரிவித்துள்ளனர்.