india

img

பணிகள் முடிவதற்கு முன்பே ராமர் கோயிலைத் திறக்க முடிவு? நாடாளுமன்ற தேர்தலைக் குறிவைத்து 2023 டிசம்பரிலேயே பக்தர்களுக்கு அனுமதி....

புதுதில்லி:
அயோத்தி ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் துவங்கி ஓராண்டுதான் ஆகிறது. கடந்த 2020 ஆகஸ்ட் 5-ஆம் தேதிதான் பிரதமர் மோடி ராமர்கோயில் கட்டுமானத்திற்கான அடிக் கல்லை நாட்டி பணிகளைத் துவங்கி வைத்தார். 2025-ஆம் ஆண்டில் கோயில் முழுமையாக கட்டி முடிக்கப்படும் என்று அப்போது தெரிவிக் கப்பட்டது. இந்நிலையில், கட்டுமானப் பணிகள் முழுமை பெறுவதற்கு முன்பாக 2023-ஆம் ஆண்டு டிசம்பர் மாதமே பக்தர்களின் தரிசனத்திற்காக அயோத்தி ராமர் கோயில் திறக்கப் படும் என்று ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

“தரை தளம் மற்றும் கர்ப்பக் கிரகம் ஆகியவை 2023-ஆம் ஆண்டின் இறுதிக்குள் முடிந்து விடும். எனவே,அப்போதே ராமரின் சிலைகள் புதியகோவிலுக்குள் கொண்டு செல்லப் படும். அப்போது முதல் பக்தர்களை அனுமதிக்கத் திட்டமிட்டுள்ளோம்” என்று அறக்கட்டளை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது சர்ச்சையை ஏற் படுத்தியுள்ளது. கோயிலை முழுமையாகக் கட்டிமுடிப்பதற்கு முன்பே அவசர அவசரமாக திறக்க வேண்டிய அவசியம் என்ன? என்று பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். 2024 மார்ச் மாதம் நாடாளுமன்றத் தேர்தல் வருகிறது என்பதால், பெட்ரோல், டீசல், சமையல் எண் ணெய், தானியங்களின் விலை உயர்வு,தொழில்கள் முடக்கம், வேலையின்மை போன்ற பிரச்சனைகளால் மோடியின் சரிந்துபோன செல் வாக்கை, ராமர் கோயில் திறப்பை வைத்து சரிக்கட்ட நடக்கும் முயற்சியாக இது தெரிகிறது என்றும் அவர்கள்குற்றம் சாட்டியுள்ளனர்.ராமர் கோயில் 110 ஏக்கர் பரப்பளவில் அமைகிறது. கோயிலைக் கட்ட ரூ.1000 கோடி வரை செலவாகும் எனமதிப்பிடப்பட்ட நிலையில், இதுவரைநன்கொடைகள் மூலம் மட்டும் 3 ஆயிரம் கோடி ரூபாய் வரை வசூலிக்கப் பட்டுள்ளது. தற்போது 360 அடி நீளம், 235 அடி அகலத்தில் அமையவுள்ள இந்த கோயில் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து எடுத்து வரப்பட்ட கற்களின் கட்டப்படுகிறது. கட்டுமானப் பணிகளில் இரும்பு மற்றும் செங்கற்கள் பயன்படுத்தப்படவில்லை. இந்நிலையிலேயே முன்கூட்டியே கோயிலைத் திறக்கும் முடிவை அறக்கட்டளை எடுத்துள்ளது. 

“மக்களைத் தரிசனத்திற்கு அனுமதிப்பதற்கும் கோயில் கட்டுமானப் பணிகளை முழுமையாக முடிப்பதற்கும் நிறையே வேறுபாடுகள் உள் ளது. சிற்பங்கள், மற்றும் கோயில் வளாகத்தின் மற்ற வேலைகள் 2025 வரை நடக்கும். இதுவரை கட்டுமானப் பணிகள் அனைத்தும் திட்டமிட்டபடியே நடந்து வருகிறது. அதில்எந்த தாமதமும் இல்லை” என்று அறக்கட்டளை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.