india

img

கொரோனா அதிகரிப்பு... முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க 10 மாநிலங்களுக்கு அறிவுறுத்தல்...

புதுதில்லி:
கொரோனா பரவல்  அதிகரித்துள்ள 10 மாநிலங்களில் முன்னெச்சரிக்கை  நடவடிக்கைகளை  எடுக்க வேண்டும் என்று ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது.  இதுகுறித்து ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு வருமாறு: 

கொரோனா  பரவல் தமிழகம், கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, ஒடிசா, அசாம், மிசோரம், மேகாலயா, ஆந்திரா ஆகிய 10 மாநிலங்களில் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. இந்த மாநிலங்களில் உள்ள 46 மாவட்டங்களில் 10 சதவீதத்துக்கும் அதிகமாகத் தொற்று பாதிப்பு  இருக்கிறது.அத்துடன்  53 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு 5 முதல் 10 சதவீதத்துக்குள் இருக்கிறது.இந்த பரவல் மிகவும் தீவிரமாகக் கண்காணிக்கப்பட வேண்டிய விஷயமாகும். எனவே இந்த மாவட்டங்களில் வைரஸ் பரவுவதைத் தடுக்க உடனடியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.  சிறிதளவு அலட்சியம் காட்டினால் கூட, நிலைமை மிகவும் மோசமாக மாறிவிடும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.