புதுதில்லி:
கிராமப்புறங்களில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாகப் பரவிக்கொண்டிருப்பதற்கு கும்பமேளாதான் பிரதான காரணமாகும் என்று தில்லி மாநில சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் குற்றம்சாட்டியுள்ளார்.
“கடந்த காலங்களில் தில்லிக்கு வந்த கிராம மக்களிடம் கோவிட்-19 தொற்று அநேகமாக இல்லை. ஆனால் இப்போது எண்ணற்றவர்கள் தொற்றுடன் வருகிறார்கள். கிராமப்புறங்களில் தொற்று பரவியிருப்பதைச் சமாளிக்க முடியாமல்நாடே திணறிக்கொண்டிருக்கிறது. இதற்கான காரணம் கும்பமேளாதான். அதிக அளவில் மக்கள் அங்கே திரண்டதுதான் காரணமாகும்,” என்று கூறினார்.கோவிட்-19 தொடர்பான பல மருந்துகள் பற்றாக்குறையுடன் இருப்பது தொடர்பாக அவர் கூறுகையில், “ரெம்டெசிவிர் மற்றும் டோசிலிசுமாப் ஆகியவை உட்பட அனைத்துமருந்துக் கம்பெனிகளும் மத்திய அரசின் கட்டுப்பாட்டின்கீழ்தான் இருக்கின்றன. நாட்டிலுள்ள மருத்துவமனைகளுக்கு மருந்துகள் மத்திய அரசால் நிர்வகிக்கப்பட்டுவரும் இணையதளம் மூலமாகத்தான் அனுப்பப்படுகின்றன, மாநிலங்களுக்கான விநியோகம்கூட மத்திய அரசால்தான் கட்டுப்படுத்தப்பட்டு வருகின்றன” என்றும் கூறினார். (ந.நி.)