ஜலந்தர்:
மோடி அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக, லட்சக்கணக்கான விவசாயிகள், தலைநகர் தில்லியை முற்றுகையிட்டு, இரண்டுமாதங்களுக்கும் மேலாக போராடிக் கொண்டிருக்கின்றனர்.இப்போராட்டத்திற்கு ஆரம்பத்தில் எதிர்க்கட்சிகள் மட்டுமே ஆதரவு தெரிவித்த நிலையில், அடுத்த கட்டமாக பாஜககூட்டணியில் இருந்த சிரோமணி அகாலிதளம், ராஷ்ட்ரிய லோக்தந்தரிக் போன்ற கட்சிகளும் ஆதரவு தெரிவிக்கத் துவங்கின. பாஜக அரசு கொடுத்த அமைச்சர் பதவிகளை ராஜினாமா செய்த அவர்கள், ஒருகட்டத்தில் பாஜக கூட்டணியிலிருந்தும் விலகினர்.தற்போது பாஜகவிற்குள்ளும் எதிர்ப்பு எழத் துவங்கியிருக்கிறது.
குறிப்பாக, பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூர் மக்களவைத் தொகுதியில், பாஜகவை சேர்ந்த விவசாயிகளே தற்போது தொடர் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.ஹோஷியார்பூர் 2019-இல் பாஜகவெற்றிபெற்ற மக்களவைத் தொகுதியாகும். இந்த தொகுதியின் எம்.பி. சோம் பிரகாஷ், தற்போது மத்திய இணை அமைச்சராக இருக்கிறார்.இந்நிலையில் போராட்டத்தில் இறங்கியிருக்கும் பாஜகவினர், “தாங்கள்பாஜகவுக்காக எதையும் செய்யத் தயார்தான். அதற்காக, இந்த மோசமான சட்டங்களை எந்த வகையிலும் ஏற்கவே முடியாது. நாங்களெல்லாம் விவசாயிகள். எப்படி எங்களால் இதுபோன்ற சட்டங் களைப் பொறுத்துக்கொள்ள முடியும்?” என்று கேள்வி எழுப்புகின்றனர்.மூன்று சட்டங்களும் திரும்பப் பெறப் படும் வரை தங்களின் போராட்டம் தொடரும் என்றும் தெரிவித்துள்ளனர்.
*************************
3 முறை எம்எல்ஏவாக இருந்தவர் பாஜக-விலிருந்து விலகினார்!
மோடி அரசின் வேளாண் சட்டங் களை எதிர்த்து, ஹரியானா மாநிலத்தின் பாஜக முன்னணி தலைவர்களில் ஒருவரும், 3 முறை எம்எல்ஏ-வாகஇருந்தவருமான ராம்பால் மஜ்ரா, தற்போது பாஜக-விலிருந்து வெளியேறியுள்ளார்.இந்திய தேசிய லோக்தள்(ஐஎன் எல்டி) என்ற கட்சியின் முக்கிய தலைவராக இருந்த இவர், இரண்டாண்டுகளுக்கு முன்பு பாஜகவில் இணைந்து செயல்பட்டு வந்தார்.இந்நிலையில், “விவசாயிகளின் துயரத்தைப் புரிந்துகொள்ள மத்திய பாஜகஅரசு தவறிவிட்டது; அவர்களின் நலன்களைப் பாதுகாப்பதிலும் தோல்வியடைந்து விட்டது” என்று கூறி, பாஜக-விலிருந்து விலகியுள்ளார்.
*************************
விவசாயிகள் கோரிக்கையை மத்திய அரசு ஒடுக்கக் கூடாது!
மேகாலயா ஆளுநர் சத்யபால் மாலிக் புத்திமதி
வசாயிகள் கோரிக் கைக்கு செவிசாய்க்க வேண் டும்; மாறாக, கோரிக்கையை ஒடுக்குவதற்கு முயலக்கூடாது என்று மத்திய பாஜக அரசுக்கு, மேகாலயா ஆளுநர் சத்யபால் மாலிக் புத்திமதி கூறியுள்ளார்.சத்யபால் மாலிக் தற்போதுஆளுநராக இருந்தாலும் அவர்தீவிரமான பாஜக-காரர். அதன்காரணமாகவே பீகார், ஒடிசா,ஜம்மு - காஷ்மீர், கோவா, கடைசியாக மேகாலயா என்று பல மாநிலங்களுக்கு ஆளுநராக நியமிக்கப்பட்டவர்.
இந்நிலையில், விவசாயிகள் போராட்டம் குறித்து அவர்பேசியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:“மத்திய அரசு விவசாயிகளின் கோரிக்கையை ஒடுக் கக்கூடாது. மாறாக கடந்த குளிர்காலக் கூட்டத்தொடரில் கொண்டு வந்துள்ள வேளாண்சட்டங்களை அவர்களுக்குப் புரிய வைக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். எந்த ஒரு கோரிக்கையையும் ஒடுக்குவது என்பது சரியான தீர்வு ஆகாது. இதன் மூலம் போராட்டம் மேலும் அதிகரிக்கும்.நாட்டின் நலனுக்காக இந்தபோராட்டத்தை முடித்து வைக்க வேண்டியது அரசின் முக்கிய பணியாகும். இரு பக்கமும் பேச்சு வார்த்தைகள் நடத்திஒரு இணக்கமான முடிவை அடைய வேண்டிய நடவடிக்கைகளில் அரசு இறங்க வேண்டும் என நான் வலியுறுத்துகிறேன். அரசு இந்த நடவடிக்கைகளின் போது இரு மாதங்களுக்கும் மேலாகப் போராடும் விவசாயிகளின் கோரிக்கையிலும் அக்கறை காட்ட வேண்டும்.விவசாயிகள் தில்லியில் வந்து போராடுவதால் அவர்களின் குடும்ப பணிகளில் மிகவும் பின்னடைவு ஏற்பட்டிருக்கும். விவசாயிகளுக்கு இதற்கான பாதுகாப்பு ஏதும் கிடையாது. எனவே, அரசு முன்வந்து இந்த போராட்டத்தை உடனடியாக நிறுத்த சமாதான பேச்சுவார்த்தைகள் நடத்த வேண் டும். அனைத்து பொறுப்பும் அரசின் கைகளில் உள்ளதால்அரசு தனது பெருந்தன்மையைக் காட்டி விவசாயிகளுக்கு ஆதரவான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
கடந்த ஜனவரி 26 அன்றுபோராட்டத்துக்குள் விஷமிகள் புகுந்து கலவரம் செய்துள்ளனர். அதுவரை அமைதியாகப் போராட்டம் நடந்து வந்தது.விவசாயிகள் பொறுப்புடன் எவ்வித ஆத்திரமும் இன்றி போராடி வந்தனர். எனவே அவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்கக் கூடாது. மாறாக விவசாயிகளுடன் உள்ள கருத்து வேற்றுமையை நீக்க தேவையான நல்ல மற் றும் புத்திசாலித்தனமான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்.” இவ்வாறு சத்யபால் மாலிக்கூறியுள்ளார்.