india

img

மருத்துவரை இழிவாக திட்டிய பாஜக எம்.பி. மேனகா காந்தி... பிரதமர் மோடிக்கு கால்நடை மருத்துவ சங்கம் கடிதம்....

புதுதில்லி:
முன்னாள் ஒன்றிய அமைச்சரும், தற்போதைய பாஜக எம்.பி.யுமான மேனகா காந்தி, கால்நடை மருத்துவர் ஒருவரை இழிவாக பேசித் திட்டியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கால்நடை மருத்துவர் ஒருவரிடம் மேனகா காந்தி அலைபேசியில் பேசியபோது அவதூறாக திட்டியதாக கூறப்படுகிறது. அவரது பேச்சின் ஆடியோவும் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. இந்நிலையில்தான், மருத்துவரைத் திட்டிய பாஜக எம்.பி. மேனகா காந்தி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, கால்நடை மருத்துவர்கள் வியாழனன்று நாடு தழுவிய கறுப்புத் தினம் கடைப்பிடித்து தங்களின் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர்.மேனகா காந்தியின் அவதூறான பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள இந்திய கால்நடை மருத்துவக் கவுன்சில் தலைவர் உமேஷ் சர்மா, மேனகா காந்தி மீது நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோருக்கு கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார்.