india

img

கர்நாடகத்தில் சொந்தபலத்தில் ஆட்சிக்குவர முடியாத கட்சி பாஜக.... எடியூரப்பாவுக்கு சித்தராமையா பதிலடி...

பெலகாவி:
கர்நாடக முதல்வராக இருந்த எடியூரப்பா பதவி விலகியதைத் தொடர்ந்து, பசவராஜ் பொம்மை புதிய முதல்வராக பதவியேற்றுள்ளார். 

எடியூரப்பா சார்ந்த லிங்காயத் பிரிவைச் சேர்ந்தவரே பசவராஜ் பொம்மை என்ற நிலையில், லிங்காயத் பிரிவினரை பாஜக திருப்திப்படுத்தி விட்டதாகவும், இதன்மூலம், அடுத்துவரும் தேர்தல்களிலும் எடியூரப்பா இல்லாதது பாதிப்பைஏற்படுத்தாது; சுமார் 17 சதவிகிதம் உள்ள லிங்காயத் சமூகத்தவரின் வாக்குகளைப் பெறுவதில் தடை யிருக்காது; எளிதில் வெற்றியும் பெற்றுவிடலாம் என்பது பாஜகவின் கணக்காக இருப்பதாக கூறப்படுகிறது. அதற்கேற்பவே “100 சித்தராமையா வந்தாலும் கர்நாடகத்தில்பாஜக மீண்டும் வெற்றி பெறுவதை தடுக்க முடியாது” என்று எடியூரப்பா பேசியிருந்தார்.இந்நிலையில், கர்நாடகத்தில் இதுவரை ஒரு முறையாவது பாஜகதனது சொந்த பலத்தில் ஆட்சியைபிடித்துள்ளதா? என்று எடியூரப்பாவுக்கு காங்கிரஸ் மூத்தத் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமானசித்தராமையா பதிலடி கொடுத்துள்ளார்.எடியூரப்பா ஆட்சியில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி அதனால் காங்கிரசுக்கு எந்த லாபமும் இல்லை என்று கூறியுள்ள சித்தராமையா, பாஜகவினருக்கு மக்களின் நலன்களைவிட ஆட்சி அதிகாரத்தை மாற்றிக் கொடுப்பதே முக்கியமாகி விட்டது. பாஜகவில்ஜனநாயகம் இல்லை. பாஜக மேலிடம் சர்வாதிகாரமாக செயல்படுகிறது என்று கூறியுள்ளார். கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்திற்கான நிவாரணத்தைக் கூட இன்னும் தராததுதான் எடியூரப்பா ஆட்சி என்றும்சாடியுள்ளார்.