india

img

50% தடுப்பூசிகளை அபகரித்த 9 கார்ப்பரேட் மருத்துவமனைகள்... மோடியின் கொள்கையால் தனியார் மருத்துவமனைகளுக்கு உள்ளும் உருவான ஏற்றத்தாழ்வு...

புதுதில்லி:
கடந்த மே மாதம் தனியார் மருத்துவமனைகளுக்கு விற்பனை செய்யப்பட்ட தடுப்பூசிகளில் பாதிக்கும் மேற்பட்டவற்றை வெறும் 9 கார்ப்பரேட்மருத்துவமனைகள் மட்டுமே அள்ளிச் சென்றிருப்பது அதிர்ச்சியைஏற்படுத்தியுள்ளது.

அதாவது, நாடு முழுவதுமுள்ளஅனைத்து தனியார் மருத்துவமனைகளுக்கும் ஒதுக்கப்பட்ட 1 கோடியே20 லட்சம் டோஸ் தடுப்பூசிகளில் 60 லட்சத்து 57 ஆயிரம் தடுப்பூசிகளை வெறும் 9 கார்ப்பரேட் மருத்துவமனைகள் மட்டுமே அபகரித்துச் சென்றுள்ளன.இந்தியாவில் 18 வயதுக்கு மேற் பட்ட அனைவருமே கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளதால், கோடிக் கணக்கான மக்கள், தடுப்பூசி போட்டுக்கொள்வதற்காக, அரசு தடுப்பூசிமையங்களில் காத்துக் கிடக்கின்ற
னர். மத்திய அரசு மட்டுமே, முன்பு கொரோனா தடுப்பூசிகளை கொள்முதல் செய்து அதனை மாநிலங்களுக்கும், தனியார் மருத்துவமனைகளுக்கும் ஒதுக்கீடு செய்து வந்தநிலையில், தற்போது மாநில அரசுகளும், தனியாரும் நேரடியாகவேதடுப்பூசிகளை வாங்கிக் கொள்ளலாம் என்று கூறிவிட்டது. கொள்முதலுக்கு ஒப்புதல் அளிக்கும் மற் றும்கண்காணிக்கும் அதிகாரத்தை மட்டும் தன் வசமே வைத்துக் கொண்டுள்ளது.

எனினும், தடுப்பூசி தயாரிப்பில்குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், எதிர்பார்க்கும் வேகத்திற்கு தடுப்பூசிகள் கிடைப்பதாக இல்லை.மத்திய அரசின் தடுப்பூசி கொள்கையின்படி, உற்பத்தி செய்யப் படும் தடுப்பூசிகளில் 50 சதவிகிதம் மத்திய அரசுக்கு போய்விடும்.மீதமிருக்கும் 50 சதவிகித தடுப்பூசிகளையே மாநில அரசுகளும் தனியார் மருத்துவமனைகளும் விலைக்கு வாங்கி பகிர்ந்து கொள்ள வேண்டும்.இதன்படி மத்திய அரசு 50.9 சதவிகிதம் (4.03 கோடி டோஸ்கள்), மாநில அரசு 33.5 சதவிகிதம் (2.66 கோடி டோஸ்கள்) அளவிற்கு தடுப்பூசிகளை கொள்முதல் செய்துள்ள நிலையில், தனியார் மருத்துவமனைகள் இதுவரை 1 கோடியே 20 லட்சம் டோஸ்களை (15.6 சதவிகிதம்) கொள்முதல் செய்துள்ளன.இதில்தான் தற்போது பிரச்சனைஎழுந்துள்ளது. அதாவது,  கடந்தமே மாதத்தில், தனியார் மருத்துவமனைகள் கொள்முதல் செய்த 1 கோடியே 20 லட்சம் டோஸ்களில், சுமார் 50 சதவிகிதத்தை- 60 லட்சத்து 57 ஆயிரம் டோஸ்களை வெறும் 9 கார்ப்பரேட் மருத்துவமனைகள் மட்டுமே கைப்பற்றியுள்ளன.

அப்பல்லோ, மேக்ஸ் ஹெல்த்கேர், ரிலையன்ஸ் அறக்கட்டளையின் எச்.என் மருத்துவமனை; மெடிகா மருத்துவமனைகள், ஃபோர்டிஸ் ஹெல்த்கேர், கோத்ரேஜ், மணிப்பால் ஹெல்த், நாராயண ஹிருதலயா, டெக்னோ இந்தியா டமா ஆகியவையே இந்த 9 மருத்துவமனைகள் ஆகும்.இதில், அப்பல்லோ மருத்துவமனை 16 லட்சத்து ஆயிரம் டோய் களையும், மேக்ஸ் ஹெல்த்கேர் 12 லட்சத்து 97 ஆயிரம் டோஸ்களையும், ரிலையன்ஸ் அறக்கட்டளையின் எச்.என் மருத்துவமனை 9 லட்சத்து 89 ஆயிரம் டோஸ்களையும், மெடிகா மருத்துவமனைகள் 6 லட்சத்து 26 ஆயிரம் டோஸ்களையும், ஃபோர்டிஸ் ஹெல்த்கேர் 4 லட்சத்து 48 ஆயிரம் டோஸ்களையும், கோத்ரேஜ் 3 லட்சத்து 35 ஆயிரம் டோஸ்களையும், மணிப்பால்ஹெல்த் 3 லட்சத்து 24 ஆயிரம் டோஸ்களையும், நாராயண ஹிருதலயா 2 லட்சத்து 2 ஆயிரம் டோய் களையும், டெக்னோ இந்தியா டமா 2 லட்சம் டோஸ்களையும் அள்ளிக்கொண்டு சென்றுள்ளன.

இது தனியார் மருத்துவமனைகளுக்கு உள்ளேயே ஒரு ஏற்றத்தாழ்வை உருவாக்கி இருக்கிறது. மிகப் பெரிய கார்ப்பரேட் மருத்துவமனைகளால் தங்களுக்குத் தேவையான தடுப்பூசிகளை எளிதாகப் பெற முடிகிறது. ஆனால், சிறியமருத்துவமனைகளால் அப்படிப் பெற முடிவதில்லை என்ற அவர் களுக்கு உள்ளேயே புலம்பலை ஏற்படுத்தியுள்ளது.மேலும், இந்த 9 கார்ப்பரேட்மருத்துவமனைக்கு பெருநகரங்களைத் தவிர்த்து, வேறு இடங்களில்மருத்துவமனைகள் இல்லாததால், கிராமப்புறங்களைச் சேர்ந்த மக்களுக்கு தடுப்பூசி கிடைப்பதிலும் ஒருதடையாக இது மாறியுள்ளது.சீரம் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனங்கள் மத்திய அரசுக்கு 150 ரூபாய்க்கு தடுப்பூசிகளை விற்பனைசெய்கின்றன. அதேநேரம் தனியார் மருத்துவமனைகளுக்கு கோவிஷீல்டு 600 ரூபாய்க்கும், கோவாக்சின்1200 ரூபாய்க்கும் தடுப்பூசிகள் விற்பனை செய்யப்படுகிறது.அதனை வாங்கும் தனியார்மருத்துவமனைகள், பொதுமக்களுக்கு கோவிஷீல்டு தடுப்பூசியை 850 முதல் 1000 ரூபாய்க்கும், கோவாக்சின் தடுப்பூசியை 1250 ரூபாய்க்கும் செலுத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.