india

img

ஜிஎஸ்டி வரி மோசடியில் 7 ஆயிரம் நிறுவனங்கள் மீது வழக்கு.... 185 பேர் கைது - மத்திய நிதித்துறைச் செயலாளர் தகவல்...

புதுதில்லி:
ஜிஎஸ்டி வரி மோசடி தொடர்பாக நாடு முழுவதும்  185 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 7000 நிறுவனங்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் மத்திய நிதித்துறைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மத்திய நிதித்துறைச் செயலாளர் அஜய் பூஷண் பாண்டே செய்தியளார்களிடம் கூறுகையில்,  வணிகர்கள்  வரி ஏய்ப்பு செய்ய முடியாது என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும். தற்காலிகமாக வேண்டுமானால் தப்பிக்கலாம். ஆனால், முழுமையாக தப்பிக்க முடியாது. வருமான வரி,சுங்க வரி உட்பட பல்வேறு அமைப்புகளிடம் இருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில்  சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுவரை  மோசடி கொள்முதல்பில்களை உருவாக்கி ஜிஎஸ்டி ஏய்ப்பு செய்ததாக 7 ஆயிரம் வழக்குகள் தொடரப்பட்டுள் ளன. 185 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிறுவனங்களுக்கு எதிரான நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

ஆண்டு விற்பனை  500 கோடி ரூபாய்க்கு மேல் உள்ள நிறுவனங்கள், மின்னணு பில்களை மட்டுமே பயன்படுத்துவது, கடந்தாண்டு, அக்டோபரில் கட்டாயமாக்கப்பட்டது. வருகின்ற ஏப்ரல் மாதம் முதல்,55 கோடி ரூபாய் விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கும்  இது கட்டாயமாக்கப்பட உள்ளது. இவ்வாறு கடும் கட்டுப்பாடுகள், நடவடிக்கைகள் எடுத்ததாலேயே, டிசம்பர் மாத வரி வசூல் அதிகரித்துள்ளது. வரி வசூல்அதிகரிப்பது, பொருளாதாரத்தையும் மேம்படுத்தும் என்பதை உணர்த்தியுள்ளது. ஜி.எஸ்.டி வரி ஏய்ப்பு செய்வோர், வருமான வரி ஏய்ப்பும் செய்வர் என்பதால், ஜி.எஸ்.டி., சோதனை நடந்த இடங்களில், வருமான வரித் துறை உள்ளிட்ட அமைப்புகளும் சோதனை மேற்கொள்ள உள்ளன.இவ்வாறு அவர் தெரிவித்தார்.