india

img

பிபிசிஎல் ஊழியர்கள் 4 ஆயிரம் பேருக்கு மருத்துவ வசதி ரத்து... தனியார்மயத்திற்கான முன்னேற்பாடு என நாடாளுமன்றத்தில் அமைச்சர் வாக்குமூலம்....

கொச்சி:
“ஓய்வூதியத்திற்குப் பிந்தைய மருத்துவ வசதித் திட்டத்திலிருந்து பிபிசிஎல் ஊழியர்களில் ஒரு பிரிவினரை வெளியேற்றுவது, அந்நிறுவனத்தை தனியார்மயமாக்கும் நடவடிக்கைகளின் ஒருபகுதிதான்” என்று ஒன்றிய அரசின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரிவெளிப்படையாக ஒப்புக் கொண் டுள்ளார்.

பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசன் நிறுவனத்திற்கு (Bharat Petroleum Corporation Limited - BPCL) உட்பட்ட கொச்சி சுத்திகரிப்பு நிலையத்தில் பணியாற்றும் 797 ஊழியர்கள், மும்பை சுத்திகரிப்பு நிலையத்தில் பணியாற்றும் 270 ஊழியர்கள் ஓய்வுக் காலத்திற்குப் பிந்தையமருத்துவ வசதித் திட்டங்களிலிருந்து விலக்கப்பட்டுள்ளனர். சுத்திகரிப்பு ஊழியர்களைத் தவிர, பிபிசிஎல்-இன்சந்தைப்படுத்தல் ஊழியர்கள் உட்படமொத்தம் 3997 பேர் இத்திட்டத்திலிருந்து விலக்கப்பட்டுள்ளனர்.திருத்தப்பட்ட மருத்துவத் திட்டம்கடந்த 2020 ஜூன் 1 ஆம் தேதி முதல்அமல்படுத்தப்பட்டது. அதாவது, பிபிசிஎல் நிறுவனத்தில் 15 ஆண்டுகள் பணியாற்றி இருந்தாலே அவர்கள்,ஓய்வுக் காலத்திற்குப் பிந்தைய மருத்துவ திட்டங்களில் பயனடைய முடியும் என்று இருந்தது. ஆனால், 2020 ஜூன் 1-இல் நிறைவேற்றப்பட்ட புதியதிட்டத்தின்படி குறைந்தபட்சம் 25 ஆண்டு பணியாற்றினால் மட்டுமே,மருத்துவ நலத் திட்டங்களைப் பெறமுடியும் என்று மாற்றப்பட்டது. மேலும் 2020 ஜூன் 1-க்குள் 15 ஆண்டுகள் பணியை நிறைவு செய்யாதவர் கள், இதன்பிறகு எத்தனை ஆண்டுகள் பணியாற்றினாலும்- ஓய்வுபெறும் போது 25 ஆண்டுகளைத் தாண்டி பணியாற்றி இருந்தாலும்கூட அவர் கள் மருத்துவ நலத் திட்டங்களைப் பெற முடியாது.

மோடி அரசின் இந்த அநீதியானபுதிய மருத்துவத் திட்டங்களுக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. குறிப்பாக,கேரளத்தைச் சேர்ந்த தொழிற்சங் கங்கள் நீதிமன்றத்திற்குச் சென்றன.வழக்குகளை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம். பிபிசிஎல் நிர்வாகத்தின் உத்தரவை இரண்டு மாதங்களுக்கு நிறுத்தி வைப்பதாக, கடந்த ஜூலை 16 அன்று உத்தரவிட்டது.இதனிடையே, பிபிசிஎல் ஊழியர்களுக்கு எதிரான ஒன்றிய அரசின் நடவடிக்கை குறித்து, கேரளத்தைச் சேர்ந்த சிபிஐ எம்.பி. பினோய் விஸ்வம் நாடாளுமன்றத்தில் அண்மையில் கேள்வி எழுப்பினார். தொழிலாளர் விரோத திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.அதற்குப் பதிலளித்துள்ள பெட் ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுஅமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, “ஒரே நேரத்தில் 3997 தொழிலாளர்களை மருத்துவ நலத்திட்டங்களிலிருந்து நீக்கியது. பிபிசிஎல் நிறுவனத்தை தனியார்மயமாக்கும் திட்டத்தின்ஒரு பகுதியாகவே செயல்படுத்தப் படுகிறது” என்று பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார். “ஊழியர்களை மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திலிருந்து விலக்குவது பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசன் நிறுவனத்தின் விற்பனைக்கு முந்தைய சீர்திருத்தத்தின் ஒரு பகுதியாகும். நிறுவனத்தின் நீண்ட நிலைத்தன்மையைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதால், நிராகரிக்கப்பட்ட 3,997 ஊழியர் களை மருத்துவத் திட்டங்களில் இணைப்பது குறித்து ஒன்றிய அரசுபரிசீலிக்கவில்லை” எனவும் தெரிவித்துள்ளார்.