ராஞ்சி:
கால்நடை தீவன வழக் கில் சிறையில் உள்ள பீகார் முன்னாள் முதல்வரும், ராஷ்டிரிய ஜனதாதள கட்சிநிறுவனருமான லாலு பிரசாத்யாதவிற்கு நீண்ட இழுபறிக்குப் பிறகு ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
லாலு பிரசாத் யாதவ், கால்நடை தீவன ஊழல் வழக்கில் தண்டனை பெற்று,ராஞ்சி சிறையில் அடைக் கப்பட்டுள்ளார். தற்போது, உடல்நலக் குறைவு காரணமாக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். மொத்தமுள்ள நான்கு ஊழல் வழக்குகளில்,மூன்றில் லாலுவுக்கு ஜாமீன்வழங்கி நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டது.இந்நிலையில், நான்காவது வழக்கான தும்கா கருவூல வழக்கில் லாலு பிரசாத்திற்கு ராஞ்சி உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. இதனால், அவர் சிறையில் இருந்து விரைவில் விடுதலை செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.