india

img

பீகாரில் விஷச்சாராயம் அருந்தி  16 பேர் பலி....

பாட்னா:
பீகாரின் மேற்கு சம்பரான் மாவட்டத்தில் லாரியா காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில், சிலர் விஷ சாராயம் குடித் துள்ளனர் எனக் கூறப்படுகிறது.  இவர்களில் வெள்ளிக்கிழமை எட்டுப் பேர் உயிரிழந்தனர்.  பலர்தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில் சனிக்கிழமை பலி எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துஉள்ளது.  இந்த சம்பவத்தில் காவல்துறையினர் ஐந்து பேரைக் கைது செய்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த விசாரணை பற்றிய விவரங்கள் துணை முதல் மந்திரி ரேணு தேவியிடம் தெரிவிக்கப்பட்டு உள்ளதாக மேற்கு சாம்ப்ரான்  மாவட்டஆட்சியர்  குண்டன் குமார் சம்பவம் குறித்து முதல்வர் ரேணுதேவி-க்கு தெரிவித்துவிட்டதாக் கூறினார்.  முதல்வர் கூறுகையில், “விசாரணை நடந்து வருகிறது.  உள்ளூர்மக்கள்  எதுவும் பேச முன்வரவில்லை.  நாங்கள் நிலைமையை கண்கானித்து வருகிறோம்” என்றார்“போலி மதுபானம் தான் இறப்புக்குக் காரணம்  லாரியா மக்கள் கூறத் தயங்குகின்றனர். போலி மதுபானத்தை உட்கொண்டதால் ஏற்பட்ட மரணம் தான் எனக்கூறும்போலோ பகுதி  மக்கள்,  மோசமான மதுபானம் லாரியாவில் விற்பனை செய்யப்படுவது எங்களுக்குத் தெரியும்” என்றனர்.