india

img

கோமாதா வரி விதிக்க திட்டமிட்டுள்ளாராம் சிவராஜ் சிங் சவுகான்

மத்திய பிரதேசத்தில் கோமாதா வரி விதிக்க திட்டமிட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.
நாடுமுழுவதும் மோடி ஆட்சிக்கு வந்ததில் இருந்து சங்பரிவார அமைப்பினர் பசு பாதுகாப்பு என்ற பெயரில் தாத்திரியில் முகமது இக்லக் உள்ளிட்ட பலரை அடைத்துக் கொலை செய்துள்ளனர். திட்டமிட்டு நாட்டின் பல பகுதிகளில் கலவரங்களை உருவாக்கி உள்ளனர். இந்நிலையில் மத்திய பிரதேச அரசு பசுக்களை பாதுகாக்க தனி அமைச்சகம் அமைக்க முடிவு செய்துள்ளது. இதைத்தொடர்ந்து  கோமாதா வரி விதிக்க அரசு திட்டமிட்டுள்ளதாக சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார். 
இதுகுறித்து அவர் கூறியதாவது,“பசுக்கள் நலனுக்காகவும், மாட்டுக்கொட்டகைகளின் பராமரிப்புக்காக பணம் திரட்டுவதற்கும் சிறிய அளவிலான வரிவிதிப்புக்கு திட்டமிடப்பட்டுள்ளது. நம் இந்திய கலாச்சாரத்தில் விலங்குகளுக்கான அக்கறை இப்போது மறைந்து வருகிறது. எனவே பசு மாடுகளுக்காக பொதுமக்களிடம் இருந்து கோமாதா வரியை வசூலிக்க திட்டமிடப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.