அருணாசலப் பிரதேசத்தில் நேற்று ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் தமிழக ராணுவ வீரர் உயிரிழந்துள்ளார்.
அருணாசல பிரதேசத்தின் மேற்கு கமெங் மாவட்டத்தில் உள்ள மண்டலா அருகே இந்திய ராணுவத்திற்கு சொந்தமான சீட்டா ரக ஹெலிகாப்டர் ஒன்று நேற்று காலை விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த லெப்டினண்ட் கர்னல் வி.வி.பி.ரெட்டி மற்றும் உதவி விமானி மேஜர் ஜெயந்த் ஆகிய இருவர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் மேஜர் ஜெயந்த் தமிழ்நாட்டின் தேதி மாவட்டத்தில் உள்ள ஜெயமங்கலத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. இவரது உடல் இன்று மாலை தமிழகம் கொண்டுவரப்படுகிறது.