சிபிஐ (எம்) மேற்குவங்க மாநிலக்குழு சார்பில் கொல்கத்தா பிரமோத் தாஸ்குப்தா பவனில் மறைந்த கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் சீத்தாராம் யெச்சூரிக்கு மாநில அளவிலான இரங்கல் கூட்டம் நடத்தப்பட்டது. இக்கூட்டத்திற்கு இடது முன்னணி தலைவர் பிமன் பாசு தலைமை தாங்கினார். பிரகாஷ் காரத், முகமது சலீம் உள்ளிட்ட தலைவர்கள் உரையாற்றினர்.