நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் பேசுவதற்கும், வாக்களிப்பதற்கும் லஞ்சம் வாங்கும் எம்.பி-க்கள், எம்.எல்.ஏ-க்கள் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
1998-இல் பிரதமராக இருந்த பி.வி.நரசிம்மராவ் தலைமையிலான ஆட்சியை கவிழ்க்கும் வகையில் கூட்டணியில் இருந்துகொண்டே ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி உறுப்பினர்கள் மாற்று கட்சிக்கு வாக்களித்தனர். அப்போது தொடர்ந்த வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை ரத்து செய்து, நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் பேசுவதற்கும், வாக்களிப்பதற்கும் லஞ்சம் வாங்கும் எம்.பி-க்கள், எம்.எல்.ஏ-க்கள் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துள்ளது.
மேலும், சட்டப்பேரவை நாடாளுமன்றத்தில் வாக்களிக்க லஞ்சம் வாங்குவது, பொது வாழ்க்கையில் நேர்மையை சீர்குலைப்பதாகும். லஞ்சம் வாங்குவது என்பது நாடாளுமன்ற சிறப்பு உரிமைகளால் பாதுகாக்கப்பட்டது அல்ல என்றும் தெரிவித்துள்ளது.