india

img

மோடி அரசுக்கு துணைபோகும் ‘தூர்தர்ஷன்’ நிறுவனம்

புதுதில்லி, மே 17 - ‘வகுப்புவாத சர்வாதிகார  ஆட்சி’, ‘கொடுங் கோல் சட்டங்கள்’, ‘தேர்தல் பத்திர மோசடி’ மற்றும் ‘முஸ்லிம்கள்’ போன்ற வார்த்தைககளை பயன்படுத்துவதற்கு ஒன்றிய அரசு நிறுவனமான தூர்தர்ஷன் டிவி  சேனல் தடை விதித்திருப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, தேர்தல் பத்திர நன்கொடை என்ற பெயரில் நடந்த மோசடிகள் குறித்த உரையை முழுமையாகவே தூர்தர்ஷன் நீக்கியிருப்பது, சர்வாதிகார நடவடிக்கை என்றும் யெச்சூரி சாடியுள்ளார்.

மக்களவை தேர்தலின் போது அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தூர்தர்ஷன்  மற்றும் வானொலி யில் உரையாற்ற நேரம் ஒதுக்கப்படுவது வழக்கம்.   அதன்படி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் தலைவர் தேவராஜன் ஆகியோர் ஆற்றிய உரையில், 

‘வகுப்புவாத சர்வாதிகார ஆட்சி’, ‘கொடூரமான சட்டங்கள்’, ‘தேர்தல்  பத்திர மோசடி’ மற்றும் ‘முஸ்லிம்கள்’ போன்ற வார்த்தைகள் இடம்பெறக் கூடாது என்று தூர்தர்ஷன் நிர்வாகம் கெடுபிடி விதித்தது விவாதங்களை ஏற்படுத்தி யிருப்பதுடன், கண்டனங்களுக்கும் உள்ளாகி இருக்கிறது.

தில்லியிலுள்ள தூர்தர்ஷன் டிவி சேனல் ஸ்டுடியோவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரியின் வீடியோ உரை பதிவு செய்யப்பட்டுள்ளது. அப்போது மோடி தலைமையிலான அரசு ‘நிர்வாகத்தின் திவால் நிலை’ என்ற வார்த்தை யை சீத்தாராம் யெச்சூரி பயன்படுத்தியுள்ளார். ஆனால், திவால் என்பதற்குப் பதிலாக ‘தோல்வி’ என்ற வார்த்தையை உச்சரிக்கு மாறு சீத்தாராம் யெச்சூரியிடம் தூர்தர்ஷன் நிர்ப்பந்தித்துள்ளது. 

இதேபோல பார்வார்டு பிளாக் தலைவர் தேவராஜன், அகில இந்திய வானொலிக்கு கொடுத்த ஆடியோவில் இடம் பெற்றிருந்த முஸ்லிம்கள்/ இஸ்லாமியர் என்ற வார்த்தை யை நீக்கவும் நெருக்கடி தரப்பட்டிருக்கிறது. 

‘முஸ்லிம்களுக்கு எதிரான குடியுரிமை திருத்தச் சட்டம்’ என்று தேவராஜன் கூறி யுள்ளார். இதற்குத் தான் தடை விதித்துள் ளது. இஸ்லாமியர் என குறிப்பிடாமல் குடி யுரிமைச் சட்டத்திற்கு எதிரான ‘சிறு பான்மையினர்’ என சொல்ல வேண்டும் என நெருக்கடி கொடுத்துள்ளது. ஆனால், தேவராஜன் இதனை ஏற்க மறுத்த நிலை யில், தேவராஜனின் உரை ஒலிபரப்பான போது அதிலிருந்த இஸ்லாமியர்கள் - முஸ்லிம்கள் என்ற வார்த்தைகளை நீக்கி ஒலிபரப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில், தூர்தர்ஷன் நிறு வனத்தின் தலைவருக்கு, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தா ராம் யெச்சூரி கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார். அதில், தூர்தர்ஷன் நிர்வாகத்தின் இந்த தணிக்கை அத்துமீறலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

“ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் தங்க ளது கருத்தை தெரிவிக்க உரிமை உண்டு. இதுதான் நாடாளுமன்ற ஜனநாயகம். ஆனால், ‘திவால்’ என்ற வார்த்தையை நீக்கி விட்டு தோல்வி என உச்சரிக்க சொல்கிறது தூர்தர்ஷன் நிர்வாகம். ‘சர்வாதிகார ஆட்சி; கொடூர சட்டங்கள்’ என குறிப்பிடக் கூடாது என் கிறது. இது சர்வாதிகாரத்தையே வெளிப் படுத்துகிறது” என காட்டமாக குறிப்பிட்டுள்ளார். 

‘பல நிறுவனங்கள் தங்கள் இருப்பு நிலைக் குறிப்பில் காட்டப்பட்டுள்ள லாபத்தை விட பல மடங்கு நன்கொடை யை அரசியல் கட்சிகளுக்கு (பாஜக) நன்கொடையாக அளித்திருப்பது பெரிய அளவிலான பணமோசடி; கருப்புப் பணத்தை வெள்ளையாக்கும் முயற்சி’ என்று சீத்தாராம் யெச்சூரி தனது உரையில் விமர்சனமாக வைத்துள்ளார். ஆனால், அந்த பகுதியை முழுமையாகவே தூர்தர்ஷன் நீக்கியுள்ளது.

இதனைச் சுட்டிக் காட்டியிருக்கும் சீத்தா ராம் யெச்சூரி, தான் கூறிய “இந்த விவரங்கள் அனைத்தும் ஏற்கெனவே முக்கிய ஊட கங்களில் வெளிவந்த செய்திகளாகும். தற் போதும் மக்களிடம் பொது உரையாடலின் ஒரு பகுதியாக இருப்பவையாகும். ஆனால், அந்தப் பகுதிகளை தூர்தர்ஷன் நீக்கியது, தற்போதைய (பாஜக) அரசாங்கத்தை பாது காப்பதற்கான முயற்சியாகும்,” என்றும் யெச்சூரி கண்டித்துள்ளார்.