புதுதில்லி:
கொரோனா தொற்று பரவல் அச்சுறுத்தல்காரணமாக பொறியியல் நுழைவுத் தேர்வானஜேஇஇ மெயின் தேர்வுகளை பிப்ரவரி மாதத்துக்குத் தள்ளிவைக்க என்டிஏ திட்டமிட்டு வருவதாகத் தகவல் வெளியாகி யுள்ளது.
இதுகுறித்து மூத்த அதிகாரி ஒருவர் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், ‘கோவிட் தொற்று காரணமாக பொறியியல் மாணவர் சேர்க்கை இன்னும் நடைபெற்று வருகிறது. அதேபோல தொற்றுப் பரவல் குறித்த அச்சமும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே நிலவுகிறது. இவற்றால் ஜனவரியில் நடைபெற வேண்டிய தேர்வை பிப்ரவரி மாதத்துக்குத் தள்ளிவைக்கப் பரிசீலித்து வருகிறோம். இதன் மூலம் மாணவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படும்.விரைவில் ஜேஇஇ மெயின் 2021 தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும். விண்ணப்பம்பெறும் பணி அடுத்த மாதம் தொடங்கும்’ என்று தெரிவித்தார்