துறைமுகம் மற்றும் கப்பல் துறை ஊழியர்கள் ஜூலை 25, 26 தேதிகளில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்திட திட்டமிட்டுள்ளனர். துறைமுகத்துறையில் மத்திய அரசு கடைபிடிக்கும் தாராளமய கொள்கை களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடக்கிறது.
கொல்கத்தாவில் நடைபெற்ற இந்திய நீர்வழிப் போக்குவரத்து தொழி லாளர் சம்மேளனத்தின் தேசிய செயற்குழு கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமைப்பின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துறைமுக கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழித்துறை அமைச்சகத்தின் உத்தரவின் பேரில் பல்வேறு பெரிய துறைமுக நிர்வாகங்களால் தொடங்கப் படும் பல நடவடிக்கைகள் மிகவும் தீங்கு விளைவிப்பன. மேலும் பெரிய துறைமுகங்களின் பொதுத்துறை அந்தஸ்தை குழி தோண்டி புதைப்ப தாகவும் கூட்டமைப்பின் பொதுச் செயலா ளர் டி. நரேந்திர ராவ், அந்த அறிக்கை யில் குற்றம்சாட்டியுள்ளார். அந்த அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:
பல கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புடைய துறைமுக சொத்துக்கள் மற்றும் சரக்குகளை கையாளும் முனை யம் போன்ற கட்டமைப்புகளை தேசிய பணமாக்கல் திட்டத்தின் கீழ் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் தாரை வார்க்கவும் அதன் உரிமைகளை ஒப்படைக்கவும் ஒன்றிய பாஜக கூட்டணி அரசு திட்டமிட்டு வருகிறது.
பெரிய துறைமுகங்கள் ஏற்கனவே சரக்கு அளவின் குறைந்த வரவு மற்றும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நிலையில் அதன் திறனை விரிவுபடுத்த ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது என்பது கார்ப்பரேட் வசம் அதனை ஒப்படைக்கும் தீய உள்நோக்கம் உடையதாகும்.
மேலும் இந்த சூழல் சமமற்ற நிலை யை உருவாக்குவதோடு இந்தியாவின் பெரிய துறைமுகங்களை தனியார் ஆப்பரேட்டர்களின் மேலாதிக்கத்திற்கு உட்படுத்தும்.
கடும் அச்சுறுத்தல்
ஒன்பது கடலோர மாநிலங்களில் 7517 கிலோ மீட்டர் பரப்பளவில் உள்ள இந்திய துறைமுகங்களின் கட்டுப்பாடு படிப்படியாக தனியார் நிறுவனங்களால் முடக்கப்படுகிறது. இது தேசத்தின் பொரு ளாதார நலனுக்கு தீங்கு விளைவிப்பது மட்டுமல்லாமல் துறைமுகங்கள் கேந்திரமான இரண்டாவது அடுக்கு பாதுகாப்புக்கு உரியவை என கருதப் படுவதால் தேசிய பாதுகாப்பிற்கும் கடு மையான அச்சுறுத்தல்களை ஏற்படுத்தும்.
புதிய முன்னேற்பாடுகள் இல்லாமல் முக்கிய பெரிய துறைமுகங்களை விரிவுபடுத்துவது மிகவும் ஆபத்தானது. அதிகரிக்கும் சரக்கு அளவு, நிதி தேவைகள், அதிக போக்குவரத்து ஆகிய வற்றை எதிர்கொள்ள அந்த துறை முகங்களின் கட்டமைப்பு வசதி முன் கூட்டியே விரிவாக்கப்பட வேண்டும்.
கட்டுப்பாட்டைக் கைவிடும் அரசு
மேஜர் போர்ட் அதாரிட்டி சட்டம் 2021, மேஜர் போர்ட் டிரஸ்ட் சட்டம் 1963 ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளன. “சேவை முன்மாதிரி” என்பதிலிருந்து “நில உரிமையாளர் முன்மாதிரி” என்ற கருத்தாக்கத்திற்கு அரசு மாறுகிறது. முக்கிய துறைமுகங்கள் மீதான அரசின் கட்டுப்பாட்டை விலக்குவது என்பதுதான் இதில் மறைந்துள்ள ஆபத்து.
இந்திய பொருளாதாரம் கலப்பு பொருளாதாரத்தில் இருந்து முத லாளித்துவ பொருளாதாரம் ஆக மின்னல் வேகத்தில் மாறி வருகிறது. பெரும் கார்ப்பரேட்டுகளுக்கு அனைத்து பொது நிறுவனங்களையும் மடை மாற்றம் செய்வதும் இதனால் மிக எளி தாகிறது. இந்திய தொழிலாளர்களின் நிரந்தர வேலை உள்ளிட்ட பணி நிலை மைகளை இது மிகவும் மோசமாக்கு கிறது.
நிரந்தர வேலைகள் பறிப்பு
ஒவ்வொரு பொதுத்துறை நிறு வனங்களிலும் நிரந்தர தன்மையுடைய பணிகளை ஹவுஸ்கோசிங் மூலம் ஒப்பந்த முறைக்கு மாற்றுவது தொழிலாளர்கள் போராடிப் பெற்ற உரிமைகளை பறிப்பதாகும். தொழி லாளர் சட்டங்களையும் இது நீர்த்துப் போக செய்கிறது. ஒட்டுமொத்தமாக அவர்களின் வாழ்வாதாரங்கள் பறிக்கப்படுகின்றன.
நசுக்கப்படும் ஊழியர் குரல்
இந்தக் கொள்கையானது பெரிய துறைமுகங்களில் தவறாமல் செயல்படுத்தப்படுகிறது. தொழி லாளர்களின் குரல் நசுக்கப்படுகிறது. 1.1. 2022 முதல் நடைமுறைக்கு வர வேண்டிய ஊதிய திருத்தம் மற்றும் பணி நிலமை முன்னேற்றங்கள் (30 நாட்களுக்குள் அமலாக வேண்டி யது) இவ்வளவு காலம் கடந்தும் இன்னும் ஒப்பந்தம் எட்ட முடியாமல் நெறியற்ற சால்ஜாப்புகள் சொல்லி, வேண்டுமென்றே இழுத்தடிக்கப்படு கிறது. துறைமுகங்களின் தொழி லாளர்கள் வரலாற்றில் முன்பு எப்போதும் இப்படி நடந்தது இல்லை.
வலுவான போராட்டம்
இதேபோல துறைமுகம் மற்றும் கப்பல் துறை தொழிலாளர்களின் பல உண்மையான பிரச்சனைகள் இன்றுவரை தீர்க்கப்படாமல் உள்ளன. இவை அனைத்தையும் செயற்குழு விவாதித்தது பரிசீலித்து, ஜூலை 25 , 26 ஆகிய இரண்டு நாட்களில் உண்ணா விரத போராட்டத்தில் ஈடுபடுவது என்றும் அது முடிவெடுத்தது. பிற சகோதர அமைப்புகளின் உதவியும் பெற வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள் ளது. முக்கிய துறைமுகங்களில் நிர்வாகப் பணிகள் ஸ்தம்பிக்கும் வகையில் உண்ணாவிரதத்திற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
இந்திய அரசியல் அமைப்பில் வழங்கப்பட்டுள்ள தொழிலாளர்களின் கூட்டுப் பேர உரிமை உள்ளிட்ட தொழி லாளி வர்க்கத்தின் உரிமைகளை மறுக்கும் மூன்று குற்றவியல் நடை முறைச் சட்டங்களை உடனடியாக ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் எனவும் செயற்குழு வலியுறுத்தியுள்ளது.