india

img

அவசர நிலை பிரகடனத்தை வைத்து தோல்வியை மறைக்க முயலும் மோடி அரசு

2014, 2019 மக்களவை தேர்தல்களில் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்த மோடி தலைமையிலான பாஜக, 2024இல் கூட்டணி  கட்சிகளின் ஆதரவுடன் 3ஆவது முறையாக பிரத மராக பொறுப்பேற்றுள்ளார் மோடி. 18ஆவது மக்க ளவையில் எதிர்க்கட்சிகளின் பலம் பிரம்மாண்ட மாக இருப்பதால் மிரண்டு போயுள்ள பாஜக, மக்க ளவை தேர்தல் தோல்வியை மறைக்கவும், தங்க ளது ஆட்சியின் நிலைமையை திசை திருப்பவும், 50 ஆண்டுகளுக்கு முன் 1975இல் இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது கொண்டுவரப்பட்ட அவ சர நிலை பிரகடனத்தை வைத்து அரசியல் ஆதா யம் தேடும் முயற்சியில் மோடி அரசு தீவிரமாக இறங்கியுள்ளது. 

2 நாட்களுக்கு முன் பிரதமர் மோடி அவசர  நிலை பிரகடனத்தை வைத்து நாடாளுமன்றத் திற்கு வெளியே செய்தியாளர்கள் சந்திப்பை நடத்திய  நிலையில், மக்களவை சபாநாயகராக பொறுப் பேற்ற ஓம் பிர்லா அடுத்த சில நிமிடங்களிலேயே அவசர நிலை பிரகடனத்துக்கு எதிராக தீர்மானம்  ஒன்றை வாசித்தார். 

இதன் தொடர்ச்சியாக, அவை உறுப்பினர்  களை சிறிது நேரம் மவுனமாக இருக்குமாறு வலி யுறுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா, பின் அவையை நாள் முழுவதும் ஒத்திவைத்தார். மக்களவை நாள்  முழுவதும் ஒத்திவைக்கப்பட்டதையடுத்து பாஜக  எம்பிக்கள்  நாடாளுமன்றத்துக்கு வெளியே அவசர நிலை பிரகடனத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர்.