india

img

மாறுபடும் அகவிலைப்படி விகிதத்தை மாற்றியமைப்பது குறைந்தபட்ச கூலி ஆகாது

புதுதில்லி மாறுபடும் அகவிலைப் படி குறைந்தபட்ச ஊதிய திருத்தத்திற்கு வழிவகுக்காது என்பதால் ஒன்றிய அரசு துறைக்கான குறைந்தபட்ச ஊதியங்களை திருத்தியமைக்க வேண்டும் என இந்திய தொழிற் சங்கங்களின் மையம் (சிஐடியு) வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக சிஐடியு பொ துச்செயலாளர் தபன் சென் வெளி யிட்டுள்ள அறிக்கையில்,”ஒன்றிய அரசு துறையில் உள்ள அனைத்து  திறனற்ற திட்டமிட்ட வேலை வாய்ப்புகளுக்கும் மாதம் ரூ.26,000 என குறைந்தபட்ச ஊதியத்தை உடனடியாக திருத்தியமைக்கவும், உயர் திறன்களுக்கு மேல்நோக்கி நிர்ணயிக்கவும் ஒன்றிய அரசை இந்திய தொழிற்சங்கங்களின் மையம் (சிஐடியு) வலியுறுத்து கிறது. அதே போல மாறுபடும் அக விலைப்படி (VDA - variable dearness allowance) மட்டும் திருத்தப்படுவதை சிஐடியு கண்டிக்கிறது. ஏனெனில் மறுபடும் அகவிலைப்படி குறைந்த பட்ச ஊதிய திருத்தத்திற்கு ஒரு போதும் வழிவகுக்காது. 5 ஆண்டு களுக்கு மிகாமல் வழக்கமான இடைவெளிகளில் குறைந்தபட்ச ஊதியங்களை திருத்தியமைக்க வேண்டும் என குறைந்தபட்ச ஊதி யச் சட்டம் 1948 பிரிவு 3(பி)  கட்டாயப்படுத்துகிறது. அதன்படி கடைசி திருத்தம் 2017 ஜனவரியில் மேற்கொள்ளப்பட்ட நிலையில், அடுத்த திருத்தம் இன்னும் மேற் கொள்ளப்படாமல் 2022 ஜனவரி முதல் நிலுவையில் உள்ளது. அதா வது கடைசி திருத்தம் 7 ஆண்டு களுக்கு முன்பு செய்யப்பட்ட நிலை யில், 2022 ஜனவரி மாதத்திற்குள் கட்டாயமாக திருத்தப்பட வேண்டி யிருந்தாலும், ஒன்றிய அரசு குறைந்தபட்ச ஊதியங்களை திருத்தியமைக்க 2 ஆண்டுகளாக இழுத்தடித்து வருகிறது.

1.10.2024 முதல் அமலுக்கு வரும் வகையில் 25.9.2024 தேதியிட்ட சமீ பத்திய அறிவிப்பு மாறுபடும் அக விலைப்படியை அதிகரிப்பது, 30.6.2024 அன்றுள்ள படி தொ ழில்துறை தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலைக் குறியீட்டில் 2.40 புள்ளிகள் அதிகரிப்பின் அடிப்ப டையில் இருமாத கால மாறுபடும் அகவிலைப்படி  மட்டுமே ஆகும். இது குறுகியதாகவும், தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் விலை உயர்வை முழுமையாக பிரதிபலிக்காததாகவும் உள்ளது. சில ஊடகங்களில் இது குறைந்த பட்ச ஊதிய திருத்தமாக தவறாக அறிக்கையிடப்பட்டுள்ளது. இது தவறான வழிகாட்டுதல் ஆகும். 

மேலும் 1.4.2024 முதல் அம லுக்கு வந்த மாறுபடும் அக விலைப்படியுடன் ஒப்பிடும்போது, ஆலைத் தொழிலாளர்க்கான நுகர்வோர் விலைக் குறியீடு (CPI (IW))இல் 13.37 புள்ளிகள் அதிக ரிப்பின் அடிப்படையில், வேலை வாய்ப்புகளில் உள்ள பல்வேறு திறன்கள் மற்றும் பகுதிகளுக்கு நாளொன்றுக்கு ரூ.4 முதல் ரூ.7 வரை மாறுபடும் அகவிலைப்படி அதிகரிப்பு உள்ளது.

மாறுபடும் அகவிலைப்படி யின் இந்த அதிகரிப்பு, தொழில் துறை தொழிலாளர்கள் எதிர்கொள் ளும் விலைவாசி உயர்வுக்கு எந்த வகையிலும் ஈடாகாது. குறைந்த பட்ச ஊதிய திருத்தம் 2 ஆண்டுக ளாக நிலுவையில் இருப்பதால், தற்போதைய வாழ்க்கைச் செலவு நெருக்கடியில் தொழிலாளர்க ளின் நிலை தாங்க முடியாததாக உள்ளது. இதனை பெருநிறுவ னங்களுக்கு ஆதரவான பாஜக தலைமையிலான தேசிய ஜன நாயக கூட்டணி அரசு கண்டு கொள்ளவில்லை. 2020-21இல் தொழிற்சாலைகள் பிரிவின் வரு டாந்திர ஆய்வின்படி, நிகர மதிப்புக் கூட்டலில் ஊதியங்களின் பங்கு 2017-18இல் 15.67 சதவீதத்தி லிருந்து 2021-22இல் 15.13 சதவீத மாகக் குறைந்துள்ளது. அதே காலகட்டத்தில் நிகர லாபத்தின் பங்கு 46.86 சதவீதத்திலிருந்து 54.37 சதவீதமாக அதிகரித்துள்ளது.

ஒன்றிய துறையில் கட்டுப் பாடற்ற ஆட்குறைப்பு வேட்டை யால் ஒப்பந்தத் தொழிலாளர்க ளின் எண்ணிக்கை தொடர்ந்து அதி கரித்து வருகிறது. இவர்களின் எண்ணிக்கை 2022-23இல் 30 லட்சத்திலிருந்து 2023-24இல் 32.58 லட்சமாக உயர்ந்துள்ளது. ஒன்றிய அரசு துறையில் குறைந்தபட்ச ஊதியங்கள் திருத்தப்படாததால் ஒப்பந்தத் தொழிலாளர்கள்தான் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்” என அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது.