வியாழன், பிப்ரவரி 25, 2021

india

img

முதல்வர்களுடன் பிரதமர் இன்று ஆலோசனை.....

புதுதில்லி:
மாநில முதல்வர்களுடன் காணொலி வாயிலாக பிரதமர் மோடி இன்று (திங்கள்) ஆலோசனை நடத்துகிறார்.

கோவிஷீல்டு, கோவாக்ஸின் ஆகிய இரு கொரோனா தடுப்பு மருந்துகளுக்கு இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்புஅனுமதி அளித்துள்ளது. இதையடுத்து, கடந்த 3 நாட்களாக 33 மாநிலங்கள், யூனியன்பிரதேசங்கள், 615 மாவட்டங்களில் 4,815 இடங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடத்தப்பட்டது. ஜனவரி 16 ஆம் தேதி தொடங்கும் தடுப்பூசி முகாமில், முதல் கட்டமாக சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள் என மொத்தம் 3 கோடி பேருக்குத் தடுப்பூசி போடப்பட உள்ளது. இந்நிலையில் ஜனவரி 11 ஆம் தேதி மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசிக்கவுள்ளார்.இதில் கொரோனா தடுப்பூசி போடு வதற்கான மாநில அரசின் ஏற்பாடுகள்,  மாநிலத்தில் கொரோனா பாதிப்பு, தடுப்பு நடவடிக்கைகள், பரிசோதனைகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தவுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

;