india

img

யார் பேச்சையும் நாங்கள் கேட்க வேண்டியது இல்லை... பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டிக்குப் பிறகும் எங்களுக்கே மக்கள் ஓட்டு போட்டார்கள்.. நரேந்திர சிங் தோமர் சொல்கிறார்...

புதுதில்லி:
அம்பானி, அதானி போன்ற கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சாதமாக மோடி கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து, சுமார்ஒன்றே கால் கோடி விவசாயிகள் தலைநகர்தில்லியை முற்றுகையிட்டு, கடந்த 20 நாட்களுக்கும் மேலாக போராடிக் கொண்டிருக் கின்றனர்.அவர்களுக்கு ஆதரவாக நாட்டின் பிறபகுதிகளிலும் ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், மறியல் என போராட்டங்கள் தீவிரமாகி இருக்கின்றன.

இந்நிலையில், மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் புதிதாக பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில்,  நாட்டில் என்ன சட்டங்கள் கொண்டுவர வேண்டும் என்று எங்களுக்குத் தெரியும், யாரிடமும் நாங்கள் ஆலோசனை கேட்க வேண்டியதில்லை என்று ஆணவமாக பேசியுள்ளார்.“மக்கள் எங்களுக்கு 303 இடங்கள் அளித்து ஆட்சியில் அமர வைத்திருக்கிறார்கள். இந்தத் தீர்ப்பு, நாங்கள் வெறுமனே ஆட்சியில் அமர்ந்திருப்பதற்கு அல்ல. வேளாண் சட்டங்கள் போன்ற மாற்றங்களைக் கொண்டு வருவதற்காகத்தான்.2014 முதல் 2019 வரையிலான பிரதமர் மோடியின் முதல் ஆட்சியில் பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி போன்ற சீர்திருத்தங்களைச் செய்தோம். அப்போதே அந்த ஆட்சிக்கு ‘கவுண்ட் டவுன் ஆரம்பம்’ ஆகி விட்டது என்று சிலர் கூறினார்கள். ஆனால் 2019-இல் மக்கள் மீண்டும் மோடிக்கே ஓட்டுபோட்டு அவரை ஆட்சியில் அமர வைத்தார்கள். 2014- இல் கொடுத்த 284 இடங்களை விட அதிகமாக 303 இடங்களில் வெற்றியைக் கொடுத்தார்கள்.

இதற்கு என்ன அர்த்தம் என்றால், பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி சீர்திருத்தம் போல பிரதமர் மோடி இன்னும் பல சீர்திருத்தங்களை செய்ய வேண்டும் என்பதுதான்.அதனால்தான், மோடி அரசும் நீண்ட காலமாக புறக்கணிக்கப்பட்ட சீர்திருத்தங்களை இப்போது விரைந்து செய்கிறது. வேளாண் சட்டங்களையும் அப்படித்தான் கொண்டு வந்துள்ளது. சிக்கலான சட்டங்கள் நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கோ, தேர்வுக்குழுவுக்கோ அனுப்பப்பட வேண்டும்தான். இந்த வேளாண் சட்டங்களோ சிறிய சட்டங்கள். எனவே, இவற்றை அனுப்பத் தேவையில்லை!விவசாயிகளை பாதிக்கும் சட்டப் பிரிவுகள் ஏதேனும் இருந்தால், அதை மறுஆய்வு செய்ய அரசு தயார். ஆனால், சட்டத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் விவாதத்துக்கு உட்படுத்த முடியாது. இந்த சட்டங்கள் எக்காரணத்தை முன்னிட்டும் திரும்பப் பெறப்பட மாட்டாது”.  இவ்வாறு தோமர் குறிப்பிட்டுள்ளார்.

;