வெள்ளி, பிப்ரவரி 26, 2021

india

img

தீக்கதிர் விரைவுச் செய்திகள்

வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி போராடி வருகின்ற விவசாயிகளுடன் மத்திய அரசு வெள்ளிக்கிழமையன்று நடத்திய 11-வது கட்ட பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எடுக்கப்படாமல் நிறைவுபெற்றது. மூன்றரை மணி நேரம் தாமதமாக வந்து காக்க வைத்த மத்திய வேளாண்துறை அமைச்சருக்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 

                                                           *******************

திட்டமிட்டபடி ஜனவரி 26-ஆம் தேதி டிராக்டர் பேரணி தில்லியில் நடைபெறும் என்று விவசாய சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

                                                           *******************

சென்னை போயஸ் கார்டனில் உள்ள மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேதா இல்லம் ஜனவரி 28 ஆம் தேதி மக்கள் பார்வையிட அனுமதிக்கப்படும் என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

                                                           *******************

விருப்பமுள்ளவர்கள் மட்டுமே தபால் மூலம் வாக்களிக்கலாம் என்று தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

                                                           *******************

குடியரசு தினமான ஜனவரி 26-ஆம் தேதி கிராம சபைக் கூட்டம் நடத்துவது குறித்து அரசு  இன்னும் முடிவு செய்யவில்லை என்று தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.

                                                           *******************

அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் ராணுவ தளவாட ஏற்றுமதி மிகப்பெரிய அளவில் அதிகரிக்கும் என்று ராணுவ ஆராய்ச்சி, மேம்பாட்டு அமைப்பின் தலைவர் சதீஷ் ரெட்டி தெரிவித்தார்.

                                                           *******************

பெட்ரோல் லிட்டருக்கு 88.07 ரூபாய், டீசல் லிட்டருக்கு 80.90 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

                                                           *******************

நாடு முழுவதும் 12 மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் உறுதிசெய்யப்பட்டுள்ளதாக வெள்ளிக்கிழமையன்று மத்திய கால்நடை பராமரிப்பு அமைச்சகம் தெரிவித்தது.

                                                           *******************

கர்நாடக மாநிலம் சிவமொக்கா அருகே ரயில்வே குவாரி பகுதியில், வெடி பொருட்கள் ஏற்றிய  லாரி வெடித்து சிதறியதில் 8 பேர் பலியாகினர்.  

;