india

img

தீக்கதிர் விரைவுச் செய்திகள்....

பெற்றோரை இழந்த  குழந்தைகளுக்கு ரூ.10 லட்சம்!

ஆந்திராவில், கொரோனா தொற் றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த பெற்றோர் களின்- ஒவ்வொரு குழந்தைகளின் பெயரிலும் வங்கியில் ரூ. 10 லட்சம் டெபாசிட் செய்யப்படும் என அம்மாநில முதல்வர்ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.குழந்தைக்கு 25 வயதாகும் வரை இந்தப்பணம் வங்கியில் இருக்கும். அதிலிருந்துஒவ்வொரு மாதமும், குழந்தையின் பாதுகாவலருக்கு 5 முதல் 6 சதவிகிதம் வட்டிவழங்கப்படும் என்றும் ஜெகன்மோகன் தெரிவித்துள்ளார்.

                                ****************

ஏழை மாணவர்களின்  கல்விக்கு என்ன வழி?

ஸ்மார்ட் போன்கள் இல்லாமல், போதிய மின்சாரம், இணைய வசதி இல்லாமல் இந்தியா முழுவதும் அணுகமுடியாத தொலைதூரப் பகுதிகளில் ஏழை மாணவர்கள் பலர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், இவர்களின் கல்வி கற்றலை உறுதிப்படுத்துவது தொடர்பாக 4 வாரங்களுக்குள் மத்தியக் கல்வி அமைச்சகம் மற்றும் கல்வித் துறைச் செயலாளர்கள் பதிலளிக்க வேண்டும் என்று மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

                                ****************

ஏழைகளுக்கு ரூ. 6 ஆயிரம்: பிரதமருக்கு காங். கடிதம்!

ஏழைகளின் வங்கிக் கணக்கில் மாதம் ரூ. 6 ஆயிரம் செலுத்துமாறு, பிரதமர் மோடிக்கு மக்களவை காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கடிதம் எழுதியுள்ளார். ஊரடங்கு காரணமாக வணிக நிறுவனங்கள், கடைகள், போக்குவரத்து போன்றவை சார்ந்து பணியாற்றுவோர் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் சவுத்ரி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

                                ****************

பெட்ரோல், டீசல் விற்பனை 20 சதவிகிதம் சரிவு!

ஏப்ரல் மாத முதல்15 நாட்களை ஒப்பிடுகையில், மே 1 முதல் 15 வரையிலான காலகட்டத்தில் நாட்டின் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை, சுமார்20 சதவிகிதம் வரையில்சரிந்துள்ளது. இதேபோல் விமான எரிபொருள் விலை விற்பனையும் 38 சதவிகிதம் வரையில் சரிந்துள்ளது. இது 7 மாதங்களில் இல்லாத சரிவு ஆகும். முழுஊரடங்கு காரணமாக, மே மாதம் மட்டும்சரக்கு போக்குவரத்து 50 சதவிகிதம் வரைகுறைந்துள்ளது.

                                ****************

கோதுமை கொள்முதல்  35 சதவிகிதம் அதிகரிப்பு!

நடப்பு ராபி சந்தை பருவத்தில் குறைந்தபட்ச ஆதரவு விலையில் கோதுமை கொள் முதல் அளவு, கடந் தாண்டின் இதே காலத்தை விட 35 சதவிகிதம் அதிகரித்துள் ளதாக கூறப்பட்டுள்ளது. கடந்தாண்டு இதே காலத்தில் 252.51 லட்சம் மெட்ரிக் டன் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், நடப்பாண்டில் மே 10 வரை, 341.77 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.